Friday, April 19, 2024 8:40 am

அவரை போய் பாருங்க சிவாவை திருப்பி அனுப்பிய அஜித் !! பெறு மூச்சு விடும் ரசிகர்கள் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிறுத்தை எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் சிறுத்தை சிவா. அடுத்ததாக அஜித்தை வைத்து வீரம், வேதாளம் எனும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து நல்ல இகமர்சியல் யக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் சிறுத்தை சிவா.

அதனை தொடர்ந்து விவேகம் எனும் திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் சரியாக போகவில்லை. அதனை தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து விஸ்வாசம் எனும் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்து தான் ஒரு சூப்பர்ஹிட் இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

அவ்வபோது சிறுத்தை சிவா விஜயை வைத்து எப்போது படம் இயக்குவார் என்று பேச்சுகள் எழும். ஆனால், அந்த பேச்சுகள் அப்படியே அமைதியாகி விடும்.கடைசியாக சூப்பர் ஸ்டாரை வைத்து அண்ணாத்தை எனும் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் மீண்டும் தான் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிறுத்தை சிவா. அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்குவார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த கூட்டணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று.

இந்த சமயத்தில் தற்போது சிறுத்தை சிவா விஜய்யை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்துவிட்டு வந்துள்ளாராம். அங்கு விஜய்க்கு, சிறுத்தை சிவா கதை கூறியுள்ளாராம். அந்த கதை விஜய்க்கும் பிடித்து போனதாக கூறப்படுகிறது. அந்த கதையை தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் சிவா ஈடுபட உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

ஒருவேளை இது உண்மையாகும் பட்சத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி விஜய் தனது 67வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆதலால் , சிறுத்தை சிவா படம் தளபதி விஜயின் 68வது படமாக கூட இருக்கலாம் என கூறபடுகிறது. இதனை அறிந்த விஜய் ரசிகர்கள், சிறுத்தை சிவா பட பாணி வேறு அது விஜய்க்கு செட் ஆகாது வேண்டாம் என கூறி இணையத்தில் கமெண்ட்களை பார்க்கக்கவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்