Friday, December 2, 2022
Homeசினிமாபுறாவால் பறிபோன மீனாவின் கணவர் உயிர் !!மருத்துவர்கள் எச்சரிக்கை என்ன?

புறாவால் பறிபோன மீனாவின் கணவர் உயிர் !!மருத்துவர்கள் எச்சரிக்கை என்ன?

Date:

Related stories

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனின் தேனிலவு திட்டம் வெளியானது

மஞ்சிமா மோகனும், கௌதம் கார்த்திக்கும் மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில்,...

கொடநாடு வழிப்பறி கொலை வழக்கு: விசாரணையை ஜன., 27க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது

கொடநாடு வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் சாட்சிகள் மற்றும் 720 தொலைபேசி...

சீனாவின் ‘வெற்றுப் பக்கப் புரட்சி’ ஏன் முக்கியமானது

கோவிட் எதிர்ப்பு போராட்டங்களில் சீனாவின் அடக்குமுறை, எதிர்ப்பாளர்களின் பக்கத்தில் நிற்கவும், சீன...

ஆடவர் உலகக் கோப்பைக்கு முன்னதாக ஹாக்கி இந்தியா டிராபி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது

FIH ஒடிசா ஆடவர் உலகக் கோப்பை 2023 புவனேஸ்வர்-ரூர்கேலா தொடங்குவதற்கு இன்னும்...

வில் ஸ்மித் தலைமையிலான ‘விடுதலை’ ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர்

உள்நாட்டுப் போர் கால லூசியானாவில் வில் ஸ்மித் தப்பி ஓடிய அடிமையாக...
spot_imgspot_img

மீனாவின் கணவர் புறா எச்சம் மூலம் பரவும் ஒருவித தொற்று நுரையீரலை பாதித்ததால் செயலிழந்தது காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது என்கிற தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் புறா எச்சம் மூலம் பாதிப்பு வருமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக பறவைகள், கோழிகளின் எச்சத்தில் ஒருவித காளான், பூஞ்சை வளர்கிறது.

இவைகளில் புழங்குபவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். ஆனால் உயிர்கொல்லி அளவுக்கு அல்ல.

இவற்றின் எச்சங்கள் காய்ந்து அதை சுத்தம் செய்யும்போது காற்றில் அதன் துகல்கள் பரவி உடலில் ஒவ்வாமை, தலைவலி, காய்ச்சல், நிமோனியா அளவுக்கு கொண்டுச் செல்லும் என்று கூறுகின்றனர்.

புறா எச்சத்தால் நோய் பரவும் அது கடுமையாக பாதிக்கும், அனைவருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என இதை பொதுவாக எடுத்துக்கொள்ள முடியாது.

குழந்தைகள், வயோதிகர்கள், உடல் பலகீனமானவர்கள், புற்றுநோய், எய்ட்ஸ் பாதித்து தொற்றுக்கு எளிதில் ஆளாகும் நிலையில் உள்ளவர்களுக்குத்தான் இது ஆபத்தை உண்டுபண்ணும்.

தற்போதைய காலக்கட்டத்தில் கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களும் எளிதில் மற்ற தொற்றுக்கு ஆளாகும் நிலையில் உள்ளதால் அவர்களையும் பலகீனமானவர்களாக எடுத்துக்கொள்ளலாம்.

பண்ணைகள், கோழிகள், புறாக்கள் அதிகம் உள்ள இடங்களில் எச்சம் அதிகமாக இருக்கும். இது சுத்தம் செய்யும்போது காய்ந்து பவுடர்போல் காற்றில் பரவ வாய்ப்புள்ளது.

அப்போது அதில் உள்ள ஆகவே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சுத்தம் செய்யும்போது அது காற்றில் பரவி பாதிப்பை ஏற்படுத்தும்.

இதை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் செய்யக்கூடாது. அந்த இடத்தில் புலங்கினாலே நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது.

ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்பது பூஞ்சைகளால் ஏற்படும் ஒரு நோயாகும், இது புறாவின் கழிவுகள் அல்லது கோழி போன்ற கழிவுகள் மூலம் மண்ணில் வளரும். ஆனால் இது ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவாது.

புறாவின் கழிவுகளை சுத்தம் செய்யும் ஒருவர் தகுந்த பாதுகாப்பு முகக்கவசம், கையுறை இல்லாமல் சுத்தம் செய்தால் காற்றில் பரவும் பூஞ்சைகளை சுவாசித்தால், அவருக்கு ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் ஏற்படும்.

இதற்காக புறா எதிரி என்பது அர்த்தமல்ல உங்கள் பகுதியில் புறா புழக்கத்திலிருந்தால் அவ்வப்போது முறையாக சுத்தம் செய்தால், நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.

புறா எச்சம் கிரிப்டோகாக்கோசிஸ், ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் போன்றது, பறவை எச்சங்களில் அல்லது மண்ணில் வளரும் பூஞ்சைகளால் ஏற்படுகிறது. ஆரோக்கியமான மக்கள் இங்கு புலங்கினாலும் சுவாசித்தாலும் மிகவும் அரிதாகவே பாதிக்கப்படுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி சக்தி குறைவாக உள்ளவர்கள், நீண்டகால நோய் பாதிப்பு சிகிச்சையில் உள்ளவர்கள், இந்த தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், கிரிப்டோகாக்கோசிஸ் உள்ளவர்களில் 85% பேர் புற்றுநோய், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என ஆய்வு சொல்கிறது.

கழிவுகளை சுத்தம் செய்யும் முன் காற்றில் அதன் துகள்கள் பரவாமல் இருக்க தண்ணீர் அல்லது சுத்தம் செய்யும் திரவத்தை தெளித்து தகுந்த கையுறை, முகக்கவசம் அணிந்து சுத்தம் செய்வதே நல்லது.

இங்கு மீனாவின் கணவர் எப்படி பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஒரு யூகம் என்னவென்றால் அவர் கோவிட் தொற்றுக்கு ஆளான ஜனவரி மாதத்திலிருந்து நுரையீரல் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா என்ற உயிர் கொல்லி அவரை ஏற்கனவே துடி துடிக்க வைத்துள்ளது.

இதில் மேற்குறிப்பிட்டதுபோல் ஏதோ ஒரு விதத்தில் புறா எச்சத்தில் ஏற்படும் கிருமி தொற்று சுவாசம் மூலம் அவரது நுரையீரலை பாதித்திருக்க வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகிறது.

இது மிகவும் அரிதான ஒன்று, ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட கோவிட் தொற்றால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவு அவருக்கு இத்தகைய தொற்று ஏற்படும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories