இதுவரை வெளிவராத நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை ரகசியம்! ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட அவரது காதல்

0
இதுவரை வெளிவராத நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை ரகசியம்! ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட அவரது காதல்

தமிழ் சினிமாவில் 70 களில் நடனகலைஞராக ஆரம்பித்து நடிகையாகி பின் அம்மா கதாபாத்திரத்திற்கென கச்சிதமான நடிப்பினை பெற்ரு விளங்கியவர் நடிகை ஸ்ரீவித்யா. ரஜினிகாந்துக்கு தளபதி படத்தில் அம்மாவாகவும் கமல்ஹாசனுக்கு புன்னகை மன்னன் படத்தில் ஜோடியாகவும் நடித்து வந்தவர் ஸ்ரீவித்யா.

கலைக்குடும்பத்தில் பிறந்தாலும் ஸ்ரீவித்யாவின் திரைப்பயணம் எளிதாக அமையவில்லை. படதநாட்டிய கலைஞராகா ஆரம்பித்து நடன மங்கையாக திகழ்ந்தார். எம்ஜிஆர் முதல் விஜய், அஜித் காலகட்ட சினிமாவரை அவரது நடிப்பு மக்கள் மத்தியில் சிறப்பாக அமைந்தது.

ஒரு நடிகையாக அவர் முழு கவனம் பெற்றது ஜெய்சங்கருடன் நடித்த நூற்றுக்கு நூறு என்ற திரைப்படத்தின் மூலம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பல புதுமுக நடிகர்களுடன் இணைந்து நடித்த காலத்தில் இவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதாக இருந்தது. என்றாலும் ஸ்ரீவித்யாவுக்கு முகத்தில் முதிர்ச்சி வராத காரணத்தால் கதாநாயகி வாய்ப்பை இழந்தார்.

இதன்பின் ஸ்ரீவித்யா வாழ்க்கையில் அடுத்த முக்கிய நபராக இருந்தவர் கமல் ஹாசன். சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற படத்தின் மூலம் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தபோது இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசு எழுந்தது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத கமல்-ஸ்ரீவித்யா நல்ல நட்புடம் பழகி வந்துள்ளனர். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த உணர்ச்சிகள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகமான அபூர்வ ராகங்கள் ஆகிய படங்களும் இதில் அடக்கம்.

இப்படி சினிமாவில் நன்றாக சென்ற காலக்கட்டத்தில் பேரடியாக வந்தது திருமணம். ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்த ஸ்ரீவித்யா நடிப்புக்கு தடை போட்டார். அதன்பின் கணவரின் தொழில் தொடர்பாக கஷ்டம் ஏற்பட்டதால் ரீஎண்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். தமிழ், மலையாளம் என சம்பாதிக்க ஆரம்பித்த ஸ்ரீவித்யாவை முறைக்கேடுகளில் ஈடுபட்டு அவரை ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. பின் விட்டால் போதும் என்பதுபோல் அவரை பிரிய முடிவெடுத்து விவாகரத்து பெற்றார்.

இதன்பின் சென்னையில் தனிமையில் வாழ்ந்த ஸ்ரீவித்யாவுக்கு 8 வயது இளையவரான கேபி. கணேஷ்குமாரிடம் நட்பு ஏற்பட்டு காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். நிலையற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த ஸ்ரீவித்யாவின் இறுதி நாட்களில் பேரிடியாக வந்து இறங்கியது அவருடைய முதுகு தண்டுவட புற்றுநோய். இந்த நோய் வந்தபின் அவர் முற்றிலுமாக சினிமாத்துறையில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். கணேஷ் குமார் அவர்களின் உதவியுடன் அவ்வப்போது மருத்துவமனை சென்று மருத்துவம் பெறுவதுமாக இருந்து பின் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார்.

அப்போது கூட ஸ்ரீவித்யாவை மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறியவர் கமல் ஹாசன் மட்டும் தான். கடைசி காலத்தின் தன் சொத்தை எல்லாம் நடன கலைஞர்களை உருவாக்க திட்டமிட்டு ட்ரஸ்ட் ஒன்றினை ஆரம்பித்து அதனை கேபி கணேஷ் குமாரிடம் பொறுப்பினை கொடுத்துள்ளார் ஸ்ரீவித்யா.

கடந்த 2006ல் உடல் நலக்குறைவால் ஸ்ரீவித்யா மரணமடைந்த பிறகு கேபி கணேஷ் குமார் சரியாக அந்த நிறுவனத்தை செயல்படுத்தவில்லை என்று ஸ்ரீவித்யாவின் அண்ணன் குற்றச்சாட்டு வைத்தார். இப்படி பல கஷ்டங்களை சந்தித்த ஸ்ரீவித்யா தற்போது வரை அவரது நடிப்பு மக்கள் மத்தியில் நிலைத்து இருந்து வருகிறது.

No posts to display