‘மாமன்னன் படக்குழு நடுவே கீர்த்தி சுரேஷூக்கு கேக் ஊட்டி விட்ட உதயநிதி! வைரலாகும் புகைப்படங்கள்

0
‘மாமன்னன் படக்குழு நடுவே  கீர்த்தி சுரேஷூக்கு கேக் ஊட்டி விட்ட உதயநிதி! வைரலாகும் புகைப்படங்கள்

தடயரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்றுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய நிலையில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷூக்கும், கீர்த்தி சுரேஷ் உதயநிதிக்கும் கேக் ஊட்டிவிட்டனர். மேலும் மாரி செல்வராஜுக்கும் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் கேக் ஊட்டிவிட்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது .

உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No posts to display