தி லெஜெண்ட் படத்திற்க்கு பிறகு அண்ணாச்சியின் அடுத்த அதிரடி முடிவு…?

பல கோடி பணங்கள் இருந்தாலும் தன்னம்பிக்கையோடு பலர் சினிமாவிற்கு வந்து நடித்து சாதிக்கவேண்டும் என்று தங்களுடைய முழு நடிப்பை போட்டு படங்களில் நடித்து வருகிறார்கள். அப்படி தான் சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் அண்ணாச்சி கூட, என்னதான் விமர்சனங்கள் வந்தாலும், அதையெல்லாம் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு தற்போது தி லெஜெண்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜெரி-ஜெடி ஆகியோர் இயக்கியுள்ளார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள், டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

அட ஆமாங்க வலிமை, அண்ணாத்த, மாநாடு, ஆகிய திரைப்படங்களின் ட்ரெய்லரை விட யூடியூப்பில் அதிக மில்லியன் பார்வையாளர்களை ” தி லெஜெண்ட்” படத்தின் ட்ரைலர் தான் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். படம் அடுத்த மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து அண்ணாச்சி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளாராம். ஆம், தி லெஜெண்ட் படம் வெளியாகி சரியாக விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றால், மீண்டும் படம் நடித்து ஹிட் கொடுக்காமல் விடமாட்டாராம். அதுவரை தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டே தான் இருக்க திட்டமிட்டிருக்கிறாராம். இதனை பார்த்த நெட்டிசன்கள் தன்னம்பிக்கை ஹீரோ நீதான்யா என பாராட்டி வருகிறார்கள்.