விண்ணை விட்டு மறந்த பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரனின் மகனும் நடிகரா ? நீங்களே பாருங்க வைரல் புகைப்படம் !!

80S 90S காலத்தில் திரைப்பட நடிகராகவும், நகைச்சுவையாளராகவும், வில்லனாகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் எஸ் எஸ் சந்திரன், எத்தனையோ நடிகர்கள் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் தமிழ்நாட்டை சேர்ந்த எஸ் எஸ் சந்திரன் ரசிகர்கள் இப்போது வரைக்கும் மறக்க முடியாமல் இருந்து வருகின்றனர்.

15 வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் எஸ் எஸ் சந்திரன். சிவாஜி கணேசன் காலம் முதல் ரஜினி கமல் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருந்தாலும் தன்னுடைய தனித்துவத்தினால் அனைவரின் மனதிலும் நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறார்.


இவர் நடித்த படங்களில் சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, பாட்டி சொல்லை தட்டாதே, கதாநாயகன் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. சூப்பர் ஸ்டாருடன் மாப்பிள்ளை உழைப்பாளி போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

தொடர்ந்தும் பல படங்களில் நடித்த இவர் 2001இல் நடிகர் ராமராஜன் இயக்கி நடித்த படமான “சீறிவரும் காளை” தான் எஸ் எஸ் சந்திரன் நடித்த கடைசி படம்.

2010ல் ஒக்டோபர் 9 மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் இவருக்கு ரோகித் மற்றும் சந்திராயன் என 2 மகன்களும் கண்மணி என்ற மகளும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் எஸ் எஸ் சந்திரன் மகனின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது இதோ அந்த புகைப்படத்தை பாருங்கள்