தளபதி விஜய் பிறந்தநாள் குறித்த தனது பதிவால் ரசிகர்களை ஈர்த்த நடிகர் தனுஷ்! அப்படி என்ன சொன்னார்? நீங்களே பாருங்க

0
23

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய், இன்று அவரின் 48 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நேற்றிலிருந்தே தொடங்கிய அவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவரின் வாரிசு பட பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் திருவிழாவானது.

இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் விஜய்க்கு திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் அவரின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களூடாகவும், நேரிலும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது, நடிகர் தனுஷ் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரின் அந்த பதிவு தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதில் தனுஷ் கூறுகையில், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர் விஜய் சார், எங்களுக்கு வழி வகுத்து எங்களை நம்ப வைத்ததற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். தற்போது தனுஷின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.