எஸ்பிபி மகனான சரணை திருமணம் செய்துகொண்டசோனியா அகர்வால்.? வைரலாகும் புகைப்படம்

0
127

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால், அடுத்ததாக 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இந்நிலையில், தொடர்ந்து இந்த இரண்டு படங்களில் நடித்த அவர் செல்வராகவனை காதலித்து கடந்த 2006 இல் திருமணம் செய்துகொண்டார், ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2010-ல் விவாகரத்து செய்தார். அதன்பிறகு தனிமையில் இருந்த சோனியா தற்போது சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், நடிகைய சோனியா அகர்வாலும் மறைந்த பிரபல எஸ். பி. பாலசுப்பிரமணியம் மகன் எஸ்பிபி சரனும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, “ஏதோ புதியது உருவாகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இருவரின் பதிவுகள் திருமண வதந்திகளைத் தூண்டிவிட்டது, அதாவது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இரு பிரபலங்களின் இன்ஸ்டா பதிவின் கமெண்டில் திருமண வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஆனால், இந்த வதந்தி பரவிய சில மணி நேரங்களிலே சரண் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவர்கள் எடுத்துக்கொண்ட முழு புகைப்படத்தையும் வெளியிட்டு ஒரு வெப் சீரிஸில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதலில் எதற்காக அந்த புகைபடத்தை பாதியாக பகிர்ந்தார் என்று தெரியவில்லை.

இதற்கிடையில், சரண் இதற்கு முன் இருமுறை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நான்கு வருட திருமணத்திற்குப் பிறகு 2002 இல் தனது முதல் மனைவி ஸ்மிதாவை விவாகரத்து செய்த அவர், 2012 இல் அபர்ணாவை மணந்தார் என்பது குறிப்படத்தக்கது.