மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! பிரபல தமிழ் நடிகையை தாக்கிய கொரோனா வைரலாகும் புகைப்படம்

vedhika

கடந்த சில தினங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முதல் அலை, இரண்டாவது அலைபோல் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் ஒருசில பிரபலங்களையும் தாக்கி வருகிறது என்னும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒருசில அரசியல் பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது திரையுலக பிரபலங்களையும் தாக்கி வருகிறது. அந்த வகையில் நடிகை வேதிகாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக்க செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை வேதிகா தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக தனக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததாகவும் இதையடுத்து தான் பரிசோதனை செய்தபோது பாசிடிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆகையால் அனைத்து ரசிகர்களும் தயவுசெய்து முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். துரதிஷ்டவசமாக தனக்கு முதல்முறையாக கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தனக்கு அதிகமாக காய்ச்சல் அறிகுறியின் மூலம் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறினார்.

எனவே எந்தவித அறிகுறிகளையும் தயவுசெய்து குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் உடல் வலி, அதிக காய்ச்சல் ஆகியவை கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு முறை கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் மீண்டும் அந்த நோய் ஏற்படாது என்று நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் தெரிவித்துள்ளார்.