பிட்டு துணி உடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா!!

0
24

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் சமந்தா. விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில படங்களில் நடித்தார்.

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.

தற்போது திரைப்படங்களில் நடிப்பது, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது, தோழிகளுடன் சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார். புஷ்பா படத்தில் அவர் நடனம் ஆடிய ஊ சொல்றியா பாடல் இளசுகளின் தூக்கத்தை கெடுத்தது. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் வெளியானது.

சமீபகாலமாக, ஆங்கில புத்தகங்களின் அட்டைப்படத்திற்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.