தளபதி விஜய் பிறந்த நாள் முன்னிட்டு காமன் டிபி வீடியோவை வெளியிட்ட பிரபல தயாரிப்பாளர்!

0
17

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22 ஆம் தேதி அவரது ரசிகர்களால் மிக விமர்சையாக கொண்டாடப்படும் என்பதும் இந்தக் கொண்டாட்டம் ஒரு வாரத்திற்கு முன்பே காமன் டிபியை வெளியிட்டு ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருவார்கள் என்பதையும் ஒவ்வொரு ஆண்டும் பார்க்கிறோம்.

இந்நிலையில் நாளை தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதை அடுத்து விஜய்யின் பிறந்தநாள் காமன் டிபி வீடியோ மற்றும் போஸ்டர்களை பல சினிமா பிரமுகர்கள் வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்யின் காமன் டிபி வீடியோவை வெளியிட்டு தெரிவித்திருப்பது, ‘தளபதிக்காக என்றும் பக்தியுடன் நிற்கும் ரசிகர்கள். ரசிகர்களுக்காக அளவற்ற அன்பு செலுத்தும் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இந்த #CommonDP வெளியிடுவதில் அளவிலா ஆனந்தம்.’ என பதிவு செய்துள்ளார்.