உண்மையிலேயே கணவரை பிரிந்துவிட்டாரா விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா? அவரே கூறிய உண்மை இதோ !!

0
21

விஜய் டிவியின் தொகுப்பாளினி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா கடந்த சில ஆண்டுகளாக கணவர் பிரவீன் குறித்து எவ்வித தகவலும் குறிப்பிடாது இருப்பதும் கணவருடன் இணைந்த புகைப்படத்தை வெளிவிடாமல் இருப்பதும் இருவரும் பிரிந்துவிட்டதாக வதந்திகள் கிளம்ப காரணமாக இருக்கிறது. ஆனால் இது குறித்து தொடர்ந்து பிரியங்கா மௌனம் சாதித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஃப்ரீஸ் டாஸ்க்கில் கூட பிரியங்காவின் கணவர் வரவில்லை என்பதும் அவரது தாயார் மட்டுமே வருகை தந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னரும் கணவர் பிரவீன் குறித்த கேள்விக்கு பிரியங்கா மழுப்பலாக பதில் அளித்து வந்தார் என்பதும் கணவர் குறித்து அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று கூறிய பிரியங்கா இதுவரை கணவர் குறித்த எந்த விவரங்களையும் வெளியிடாமல் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் பிரியங்காவின் சகோதரருக்கு குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையுடன் பிரியங்காவின் புகைப்படங்கள் வெளியான நிலையில் கூட அவரது கணவர் பிரியங்காவின் அருகில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரியங்காவிடம் ஒரு ரசிகர், ‘திருமணமான பிறகு எல்லாவற்றையும் எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு ‘நம்மை புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால், கணவருக்கு நாம் விசுவாசமாக இருந்தால் எல்லாம் சாத்தியம் தான்’ என்று பதில் கூறியுள்ளார்.

இப்பதிலில் இருந்தே பிரியங்கா கணவரை பிரியவில்லை என நினைத்துக்கொண்டாலும், கணவருடன் உள்ள புகைப்படத்தை அவர் பல ஆண்டுகளாக வெளியிடாமல் இருப்பது அனைவர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.