ரஜினியை வைத்து நெல்சன் இயக்கும் ரஜினி 169 படத்தின் பட பெயர் ஃபஸ்ட் லுக் இதோ !!

0
60

நடிகர் ரஜினி நடிப்பில் கடைசியாக தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க வெளியான இத்திரைப்படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாகி வெளியாகி இருந்தது.

விஸ்வாசம் படம் போல இயக்குனர் இப்படத்தை கொண்டு சென்றாலும் மக்களிடம் சரியான ரீச் பெறவில்லை, வசூலும் அந்த அளவிற்கு இல்லை.

தற்போது தனது 169வது படத்தை இயக்க ரஜினி இளம் இயக்குனர் நெல்சனை தேர்வு செய்துள்ளார். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள், அனிருத் இசையமைக்கிறார்.

அதன்பிறகு படம் குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் தற்போது புதிய அப்டேட் வெளியிட்டுள்ளனர் சன் பிக்சர்ஸ். படத்தின் பெயர் ஜெயிலர் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.