சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் நடிக்கும் கலகலப்பான காமெடி படம் ‘காபி வித் காதல்’ இந்த படத்தில் அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், மாளவிகா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக யுவன் தனது தந்தையான இளையராஜா பாடல்களை ரீமேக் செய்து வருகிறார். அவ்வாறு வெளியாகும் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. முன்னதாக ‘மைக்கெல் மதன காமராஜன்’ படத்திலிருந்து ‘வெச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலை டிக்கிலோனா படத்திற்காக ரீமேக் செய்தார் யுவன். அந்த பாடல் பெரும் ஹிட் அடித்தது.
இந்நிலையில் தற்போது அதே மைக்கெல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான ‘ரம் பம் பம்’ பாடலை ‘காபி வித் காதல்’ படத்தில் ரீமேக் செய்துள்ளார் யுவன். இந்த பாடல் நேற்று யூட்யூபில் வெளியான நிலையில் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.