Saturday, April 27, 2024 2:30 pm

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விடாமுயற்சி படத்தை பற்றி வெளியான அசத்தலான அப்டேட் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தனது படத்தை இயக்கி வருகிறார், மேலும் படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அஜர்பைஜானில் சில வாரங்களுக்கு முன்பு ‘விடைஅமுயற்சி’ படப்பிடிப்பு தொடங்கியது. இப்போது, லேட்டஸ்ட் அப்டேட் என்னவெனில், இது அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் ஷெட்யூல் முடிவாகும்.
இப்படத்தின் அஜர்பைஜான் ஷெட்யூல் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பிற்காக படக்குழு துபாய் செல்லவுள்ளது.’விடாமுயர்ச்சி’ படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது, மேலும் நடிகர் தனது சமீபத்திய படத்தில் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடக்கவுள்ளது, மேலும் படத்தின் வெளிநாட்டு ஷெட்யூல் டிசம்பர் இறுதி வரை நீடிக்கும். அதன்பிறகு படக்குழுவினர் தங்களின் கடைசி ஷெட்யூலுக்காக சென்னை திரும்புவார்கள், மேலும் படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்ம சினிமாவில் யாரையும் அலட்டிக் கொள்ளாமல் தன்னடக்கத்துடன் பழகும் அல்டிமேட் ஸ்டார் அஜித். சில லாங் பைக் ரைடுகளுக்கு பின் விடாமுயற்சி படத்தை கையில் எடுத்தார். ஷூட்டிங் லேட்டா தொடங்குவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

தான் கையில் எடுத்த திரில்லர் ஸ்டோரிலேயே பல டூவீஸ்ட்களை ஒளித்து வைத்திருக்கும் மகிழ்திருமேனி அவர்கள் இயக்கத்தில் அஜித் விடாமுயற்சியில் ஒப்பந்தமானார். சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது, இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. விடாமுயற்சி கதையை பற்றி மகிழ்த்திருமேனிடம் கேட்க கதையோ, புதிருக்குள் விடுகதை! விடுகதைக்குள் மர்மம்! என மிகவும் சஸ்பென்ஸாக வைத்துள்ளார்.

மேலும் படத்தை வெற்றி செய்வதன் பொருட்டு எந்த ஒரு சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று அஜித் படப்பிடிப்பு குழுவினருக்கு கட்டளை இட்டுள்ளார். முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியுமா ஆங்காங்கே விடாமுயற்சியின் சில தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அந்த தகவல் தற்போது நம்ம காதுக்கு வந்துட்டு போனா சும்மாவா விடுவோம்.கதையின் டைட்டிலிலேயே நாயகன் ஏதோ போராட போகிறார் என்று தெரிகிறது. என்ன போராட்டம்? நாட்டிற்குள் போராட்டமா? அல்லது இன்டர்நேஷனல் அளவில் உளவாளியாக வருகிறாரா? இதுவும் அல்லாமல் சாதாரண மனிதனாக இருந்து ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கி தன் மக்களுக்கு எதிரான வன்முறையை கட்டு அவிழ்க்கும், மண் ஆசை பிடித்த வெறியர்களை ஒடுக்கும் உமர் முக்தராக வரப் போகிறாரா? என்பது போன்ற பல மர்மங்களை ஒளித்து வைத்திருக்கிறது விடாமுயற்சி.

எண்ட்டர்டைமண்ட்காகவும் அல்லது விருப்பமான நடிகருக்காக அல்லது இயக்குனருக்காக படம் பார்க்க சென்றாலும் சில படங்கள் மட்டுமே ரசிகர்களின் மனதில் நீண்ட காலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன அந்த வகையில் அஜித் அவர்கள் இது போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுத்தது ஆச்சரியத்திற்குரிய விஷயமே.

காதல், நகைச்சுவை, ஆக்சன், திரில்லர் என்பது போன்ற நார்மல் படமாக இல்லாமல் ஏதோ ஒன்று மக்களுக்கு சொல்ல வருகிறார். மக்களை இருக்கையின் நுனியில் உட்கார வைத்து சிந்திக்க வைக்க போராடும் அஜித்தின் விடாமுயற்சி வெற்றி பெறுமா என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.இப்படம் ஹாலிவுட் ஸ்டைலில் உருவாவதால், அஜர்பைஜானில் முழு படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சஸ்பென்ஸ் த்ரில்லர், இயக்குனர் மகிழ் திருமேனி, ‘விடாமுயற்சி’யை ஒரு கம்பீரமான படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார், மேலும் அவர் ஆர்வமாக தனது திட்டத்தின் படி படத்தை தொடர்ந்து நகர்த்துகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் ஆகியோர் ‘விடாமுயற்சி’ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், அதே நேரத்தில் சிலர் ஊடக தொடர்பு மூலம் படத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்