Monday, April 29, 2024 3:07 pm

ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ் : ரசிகர்கள் கொண்டாட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி’ நாளை (டிசம்பர் 1) திரையரங்குகளில் ரிலீசாகிறது. இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் , ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் செஃபாக நடிகை நயன்தாரா தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ நாளை (டிசம்பர் 1) திரையரங்குகளில் ரிலீசாகிறது. இந்தப் படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். மேலும், இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன் , எம்.எஸ்.பாஸ்கர், பிராத்தனா மற்றும் இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ நாளை (டிசம்பர் 1) திரையரங்குகளில் ரிலீசாகிறது. இந்தப் படத்தைஅர்ஜுன் ரெட்டி இயக்கியுள்ளார். இந்தப்  படத்தில் ரன்பீர் கபூருடன், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தர்ஷனின் ‘நாடு’ நாளை (டிசம்பர் 1) திரையரங்குகளில் ரிலீசாகிறது. இந்தப் படத்தை எம் சரவணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தர்ஷனுடன், தர்ஷன்,  மகிமா நம்பியார், சிங்கம்புலி, ஆர் எஸ் சிவாஜி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

பாலாஜி முருகதாஸின் ‘வா வரலாம் வா’ நாளை (டிசம்பர் 1)  திரையரங்குகளில் ரிலீசாகிறது. இந்தப் படத்தை , எல்.ஜி. ரவிசந்தர் – எஸ்பிஆர் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.  இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லீ, சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, காயத்ரி ரெமா, பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், திலீபன், பிரபாகரன், யோகிசாமி, ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

‘சூரகன்’ நாளை (டிசம்பர் 1) திரையரங்குகளில் ரிலீசாகிறது. இந்தப் படத்தை சதீஸ் கீதா குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கார்த்திகேயன்  வி, சுபிக்ஷ கிருஷ்ணன், பாண்டியராஜன், வின்சென்ட் அசோகன், மன்சூர் அலிகான், சுரேஷ் சந்திரா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த ஆறு படங்களும் வெவ்வேறு ஜானர்களில் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, ரசிகர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு படம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்