Saturday, April 27, 2024 2:42 pm

கழுகிடம் தோற்ற காகம் ! ரஜினியின் ஜெயிலர் பட வசூலை முறியடிக்க திணறும் லியோ ! ரியல் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

2021 ஆம் ஆண்டு வெற்றிகரமான திரைப்படமான ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த அதிரடி நாடகம். இரண்டு வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடிப்பதால், ‘லியோ’ லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையை கவனிக்க, காட்சிகளை மனோஜ் பரமஹம்சா கைப்பற்றினார்.

ஆனால், முதல் நாளில் மட்டுமே சிறப்பான ஓபனிங் இருந்தது. அடுத்தடுத்து வெளியான நெகட்டிவான விமர்சனங்களால் லியோ படத்திற்கு வரவேற்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் லியோ வெளியானது முதல் இதுவரை உலகம் முழுவதும் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயிலருக்குப் பிறகு இந்தாண்டு தமிழ்நாட்டில் 200 கோடி வசூலை கடந்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது லியோ. அதேபோல் கேரளாவில் 60 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாம். ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் முதல் தமிழ்ப் படமாக லியோ இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என தயாரிப்பாளர் லலித் குமாரே கூறியிருந்தார்

இந்தப் படம் வெளியாகும்போது, திரையரங்குகளில் இருந்து 80 சதவீதம் அளவுக்கு தயாரிப்புத் தரப்பு பங்கு கேட்டதால், பல திரையரங்குகள் இப்படத்தை வெளியிட தயக்கம் காட்டின. பல திரையரங்குகள், அக்டோபர் 18ஆம் தேதிவரைகூட இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தின. முடிவில் தமிழ்நாட்டில் 850 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. இந்தப் படம் வெளியான பிறகு, கலவையான விமர்சனங்களையே படம் பெற்றது.

இருந்தபோதும், படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவிக்கிறது. ஆனால், கடந்த சில நாட்களாக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், இந்தப் படத்தால் தங்களுக்கு லாபமில்லை என ஊடகங்களில் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக புதிய படங்களுக்கு 60 முதல் 70 சதவீதம் மட்டுமே பங்களிப்புத் தரப்படும் நிலையில், இந்தப் படத்திற்கு 80 சதவீதம் பங்களிப்புச் செய்ததால், தயாரிப்பாளர்களுக்கு வசூல் அதிகமாக உள்ளது.

அதனால்தான் இப்படி கணக்கு காட்டி வருகின்றனர் என்று தகவல்கள் வெளியானது. இதற்கு முன்னதாக தமிழ் சினிமாவில் 500 கோடியை தாண்டி வசூல் செய்த படமாக ரஜினியின் 2.0, ஜெயிலர் மற்றும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படங்கள் இருந்தது. இப்போது இந்த லிஸ்டில் விஜய்யின் லியோ படமும் இணைந்து இருக்கிறது. ஆனால் லியோ படத்திற்கு அதிக படுத்துக்களை தயாரிப்பாளர்களை வாங்கியதாகவும் கருத்துகள் பரவுகிறது.

அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் பாகம் இரண்டிற்கு டிக்கெட் ரூபாய் 190 க்கு விற்கப்பட்டது. அவ்வாறு விற்க சொல்லி மணிரத்தினம் கூறினாராம். அதனால் அந்த பாகம் வசூல் குறைவாக ஈட்டியதாகவும் தகவல்கள் பரவியுள்ளது. அதுமட்டுமின்றி ஜெயிலர் வசூலை தற்போது வரை லியோவால் முறியடிக்க முடியவில்லை. அதோடு மட்டுமல்லாமல் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிறைய படங்கள் ரிலீஸாக இருக்கிறது.

இதனால் இப்போதே லியோ படம் பாதி திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டுவிட்டது. ஆகையால் இனி வரும் நாட்களில் லியோ படத்தின் வசூல் அதிரடியாக குறையும் என சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த வசூல் குறைவுக்கு காரணம் படம் உருவாகும்போது எதிர்பார்ப்பை அதிகமாகியது தான். இந்நிலையில் லியோ வசூலை பார்த்துவிட்டு நம்பர் ஒன் இடம் எப்போதுமே ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் தான் என ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரும் ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான லியோ படம் உலகளவில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்ததா இல்லையா என தற்போது திரை வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் கண்டிப்பாக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் முறியடிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.இருப்பின்னும் ஜெயிலர் படம் உலகளவில் ரூ. 625 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

ஆனால் தற்போது லியோ இதுவரை உலகளவில் ரூ. 570 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இன்னும் சில நாட்கள் திரையரங்கில் ஓடினாலும் கூட குறைந்தபட்சம் ரூ. 575 கோடிக்கும் மேல் தான் உலகளவில் லியோ வசூல் வரும் என சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இதனால் கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் லியோ முறியடிக்காது என தெரிகிறதுதமிழ் நட்சத்திரம் விஜய் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடையேயான முதல் ஒத்துழைப்பை லியோ குறித்தது. சஞ்சய் தத், த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கௌதம் மேனன் உட்பட ஒரு குழும நடிகர்களை லியோ கொண்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்