Saturday, April 27, 2024 2:22 pm

லியோ படத்தால் எங்களுக்கு துளியளவு லாபம் கூட கரண்ட் பில் காசு கூட கிடைக்கல ! லாஸ் தான் ! விளாசிய திருப்பூர் சுப்பிரமணியம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘லியோ’ படத்தில் இரண்டு வித்தியாசமான கேரக்டரில் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மேலும் படம் லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், மிஷ்கின், சாண்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் அவர்கள் அந்தந்த கதாபாத்திரங்களின் மூலம் படத்திற்கு சக்தி சேர்த்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, காட்சிகளை மனோன் பரமஹம்சா கைப்பற்றினார்

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் வெளியானதில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் செய்தியாளர்களுடன் உரையாடியபோது, ​​படத்தின் வெற்றியாளர் சந்திப்பை விரைவில் நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ‘லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தற்போது தமிழக காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது.

எந்த எந்த தியேட்டர்ல என்ன விலைக்கு லியோ படத்துக்கான டிக்கெட் விற்கணும், எப்படி தொழில் பண்ணனும் என்றெல்லாம் லலித் குமார் எங்களுக்கே சொல்லிக் கொடுத்த அத்தனை ஆதாரங்களையும் அடுத்து அடுத்து வெளியிடப் போறேன் என திருப்பூர் சுப்பிரமணியம் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரை ஒட்டுமொத்தமாக வச்சு செய்துள்ளார்.

பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தை விருப்பப்பட்டு போடவில்லை.அந்த அளவு அதிகமான ஷேர் கேட்டு எல்லா தியேட்டர்காரர்களையும் கசக்கிவிட்டார்கள். படம் வசூல் அதிகமா செஞ்சாலும் அதில் எங்களுக்கு பிரயோஜனம் இல்லை. இதனால் எங்களுக்கு நஷ்டமில்லை. அவங்க இவ்வளவு தொகை ஷேர் கேட்டால் மீத தொகை எங்களுடைய திரையரங்க பராமரிப்புக்கே பத்தாது.

இந்த படத்துடன் இன்னொரு படம் மட்டும் வந்திருந்தால், இப்போ கிடைத்துள்ள தியேட்டரில் பாதி கூட கிடச்சிருக்காது. வேறு படம் இல்லாததால் தான் இதை திரையிட வேண்டிய கட்டாயத்தில் திரையிட்டோம்” எனவே லியோ படத்தால் எங்களுக்கு எந்த வித லாபமும் இல்லை திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் லியோ படத்திற்கு புக்கிங்கே இல்லை என்றும் தியேட்டர்கள் காத்து வாங்குவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் லியோ படம் 500 கோடி, 1000 கோடி என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் வடை சுட்டு வந்தாலும், லியோ படத்தை வெளியிட்ட திரையரங்க பராமரிப்புக்கே பத்தாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து வருவது, இதுக்கு மேல லியோ வசூல் சாதனை என உருட்ட முடியாத சூழலுக்கு விஜய் ரசிகர்களையும், லியோ படக்குழுவினரையும் தள்ளியுள்ளது.

லலித் குமார் தன்னிடம் பணம் வாங்கித்தான் லியோ படத்தையே எடுத்தார் என அம்பலப்படுத்தி உள்ள திருப்பூர் சுப்பிரமணியன் லலித் என்ன மாதிரியான ஆளு? எப்படி சினிமாவுக்குள் வந்தார்.. மாஸ்டர் பட சமயத்தில் நடந்த தில்லு முல்லு என அனைத்தையும் அம்பலப்படுத்தப் போவதாக பயமுறுத்தி உள்ளார்.சினிமாவில் பின்னணியில் நடக்கும் டீலிங்கை எல்லாம் தன்னை பற்றி லலித் குமார் அவதூறாக பேசிய நிலையில், அப்செட்டான திருப்பூர் சுப்பிரமணியம் ஒவ்வொன்றாக வெளியிட்டு லலித் குமாரின் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்ற போகிறார் என ரஜினி ரசிகர்கள் திருப்பூர் சுப்பிரமணியத்தின் பேட்டியை தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

மாஸ்டர் படத்துக்கு 350 ரூபாய்க்கு தான் டிக்கெட் விற்க காரணமே லலித் குமார் தான் என்கிற பெரிய குண்டையும் தூக்கிப் போட்டுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியன்.லியோ படம் தனது தியேட்டரில் இதுவரை 82 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் என திருப்பூர் சுப்பிரமணியன் சொல்லி உள்ள நிலையில், லியோ படம் லாபமே இல்லை என திருப்பூர் சுப்பிரமணியத்தை பேச யார் பின்னாடி இருந்து இயக்கியது என்கிற கேள்வியை விஜய் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய்யின் பினாமி தான் லலித் குமார் என்று சொன்னதெல்லாம் பொய் என்பதை திருப்பூர் சுப்பிரமணியமே அம்பலப்படுத்தி உள்ளார் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடைபெற்ற ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் ‘லியோ’ திரைப்படத்தின் வசூல் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிகழ்வில் லோகேஷ் பேசியதாவது: ஒரு இயக்குநரின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட வேண்டுமெனில் அதறகான பரிசோதனை முயற்சிக்கு ஒரு பெரிய நடிகர் தயாராக இருக்க வேண்டும். என்னுடைய கரியரில் அப்படியானவர் கார்த்தி. அவருடைய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது எனக்கு பெருமை. மார்ச் அல்லது ஏப்ரலில் ரஜினி உடனான படம் தொடங்கும்.

இன்னும் ஓரிரு நாட்களில் ‘லியோ’ சக்ஸஸ் மீட்‌ குறித்த அப்டேட் வரும். படத்தின் வசூலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அது தயாரிப்பாளார் தொடர்புடைய விஷயம். மக்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம். திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாக இருப்பதாக கலவையான விமர்சனங்களும் வருகின்றன. அதையும் ஏற்றுக் கொள்கிறேன்” இவ்வாறு லோகேஷ் கனகராஜ் பேசினார்.

மேலும் லியோ படம் பார்த்து விஜய் என்ன சொன்னார் என கேட்டதற்கு, விஜய் ரொம்ப ஹாப்பியாக இருக்கிறார் என்றும், நான் தியேட்டர் விசிட்டின் போது காயமடைந்ததை அறிந்து போன் பண்ணி விசாரித்தார். இன்னும் அவரை நேரில் பார்க்கவில்லை என கூறினார். அதுமட்டுமின்றி லியோ தான் 5 ஆண்டுகளுக்கு முன்னர் பண்ணிய கதை என்றும் அதில் தேவையில்லாத மாற்றங்களை செய்யாமல் முடிந்தவரை அப்படியே படத்தை எடுத்துள்ளதாக கூறினார்

இறுதியாக கைதி 2 படம் பற்றி பேசிய லோகேஷ். இது நிச்சயம் ஸ்டிராங் ஆன படமாக இருக்கும் என கூறினார். மேலும் அதில் எல்லாருடைய பங்களிப்பும் கைதி 2-வில் ஸ்டிராங்கா இருக்கும் என்றும் லோகேஷ் ஒரு ஹிண்ட் கொடுத்துள்ளார். இதனால் ஏற்கனவே எல்சியுவில் உள்ள ரோலெக்ஸ் சூர்யா, விக்ரம் கமல், லியோ தாஸ் விஜய் ஆகியோரின் கேமியோ இப்படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கைதி 2 படத்துக்கு அடுத்ததாக சூர்யாவை வைத்து தான் ரோலெக்ஸ் படம் பண்ண உள்ளதாகவும் லோகேஷ் அந்த விழாவில் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள இரண்டாவது படம் ‘லியோ’. இந்த படத்தின் திரைக்கதையை லோகேஷ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி எழுதியுள்ளனர். விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த அதிரடி பொழுதுபோக்கு திரைப்படம். மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் மற்றும் பலர் துணை வேடங்களில் காணப்பட்டனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்