Saturday, April 27, 2024 10:43 pm

லியோ படத்தால் நொந்து நூடுல்ஸான தயாரிப்பாளர் ! வாடிய முகத்துடன் தயாரிப்பாளர் சொன்ன பகீர் தகவல் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘லியோ’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மற்றும் படம் பாக்ஸ் ஆபிஸில் பிரமாதமாக தொடங்கியுள்ளது. ஆனால் பார்வையாளர்கள் திரையரங்குகளில் ‘லியோ’வின் மூன்று வெவ்வேறு பதிப்புகளைக் கண்டறிந்துள்ளனர், மேலும் இது தயாரிப்பாளர்களின் திட்டமா அல்லது தவறுதலாக நடந்ததா என சந்தேகிக்கின்றனர்.விஜய்யின் ‘லியோ’ பாக்ஸ் ஆபிஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, சாதனைகளை முறியடித்து, இந்த மைல்கல்லை மிக வேகமாக எட்டிய தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. திரைப்படம் மீண்டும் மீண்டும் பார்வையாளர்களை ஈர்க்கிறது, ரசிகர்கள் தொடர்ந்து அதை மீண்டும் பார்க்கிறார்கள். இருப்பினும், ஒரு முக்கிய கேள்வி எழுகிறது: ‘லியோ’ மூன்று வெவ்வேறு பதிப்புகளைக் கொண்டிருக்கிறதா?

முதல் நாள் சொன்ன லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூலையே உலக மகா உருட்டு என நெட்டிசன்கள் விளாசி தள்ளிய நிலையில், இரண்டாம் நாளில் கப்சிப்பென வசூல் விவரத்தை அறிவிக்காமல் அமைதியாகி விட்டார் தயாரிப்பாளர் லலித் குமார்.

மேலும், லியோ படத்தை ஒரு வாரமாவது கடைசியாக முட்டுக் கொடுத்து ஓட வைக்க வேண்டுமே என்கிற பாரம் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜை தொடர்ந்து லலித் குமார் மீது விழுந்த நிலையில், சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.ஆனால், முதல் நாளில் 148.5 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் நம்பர் ஒன் வசூல் சாதனை படத்தை கொடுத்த தயாரிப்பாளர் போல சந்தோஷமாக எல்லாம் இல்லாமல் கடும் மன விரக்தியில் வாரிசு படத்தை முடித்து விட்டு அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எல்லாம் எப்படி முட்டுக் கொடுத்து 300 கோடி வடை சுட்டார்களோ அதே போலத்தான் லலித் குமார் உள்ளார் என அவரது பேட்டி புகைப்படங்களை ட்ரோல் மெட்டீரியலாக அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் மாற்றி வருகின்றனர்.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு கலாநிதி மாறன் அடைந்த சந்தோஷத்தின் எதிரொலியாகத் தான் சம்பளத்தை தாண்டி ஷேர் மற்றும் கார் கொடுத்தார் என்றும் அதெல்லாம் என்னால மாஸ்டர் படத்திலேயே கொடுக்க முடியவில்லை என்பதை மறைமுகமாக லலித் சொல்லி வருவது வேடிக்கையாக உள்ளது.மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் அப்போ சேவியர் பிரிட்டோ இல்லையா? இவர் தானா? என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இரண்டாம் நாள் வசூல் பாதியாக குறைந்த நிலையில், அதை அறிவிக்கவே இல்லை என கலாய்த்து வருகின்றனர்.

மேலும், லியோவில் லோகேஷின் ஸ்க்ரிப்ட் சுத்தமாக எடுபடவில்லை என ரசிகர்களே கூறி வந்தனர். லியோ முதல் பாதி லோகேஷ் படமாகவும், இரண்டாம் பாதி விஜய் படமாகவும் உருவாகியுள்ளது. மொத்தமாக பார்க்கும் போது விஜய், லோகேஷ் என இருவரது படங்களாகவும் லியோ இல்லை என ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் “விஜய் உட்பட பலரும் டிஸ்கஸ் செய்து சில காட்சிகளை மாற்றினோம்,” என்று சொல்லியிருக்கிறார்.

மேலும் அவர் கூறியதாவது, “பீஸ்ட்’ படம் முடிச்சிட்டு ‘வாரிசு’ படத்துக்கு முன்னாடியே இந்தப் படம் எடுக்கலாம்னு இருந்தோம். ‘விக்ரம்’ படம் முடிய கொஞ்சம் டிலே ஆனதால விஜய் சார் ‘வாரிசு’ போயிட்டு வந்தாரு” என்று பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, “அவர் கதை செலக்ட் பண்ணிட்டாரு, அப்புறம்தான் லோகேஷ் வந்து என்கிட்ட கதை சொன்னாரு. நானும் ஜெகதீஷும் தான் கதை கேட்டோம்.நல்லாருக்குன்னு சொல்லிதான் வந்தேன்.

விஜய் சார் நைட்டு போன் பண்ணி கதை கேட்டியே எப்படியிருக்குன்னு கேட்டாரு. இந்த இடத்துல கொஞ்சம் ஆல்டர் பண்ணா நல்லாருக்கும்னு தோணுது, என் ஜட்ஜ்மென்ட் தெரியலன்னு சொன்னேன். உடனே லோகேஷ் கிட்ட பேசினாரு. இந்த மாதிரி இருக்கு, நீங்க என்ன நினைக்கறீங்கன்னு லோகேஷ் கிட்ட கேட்டாரு.
பத்து நாளைக்கு அப்புறம் கொஞ்சம் சேஞ்ச் பண்ணி சார் கிட்ட சொன்னாரு. அதுக்கப்புறம் ஷுட் போனோம்.

இந்தப் படத்துக்கு நிறைய விஷயங்கள் டிஸ்கஸ் பண்ணோம், அதையெல்லாம் விஜய் சாரை வச்சிக்கிட்டுதான் டிஸ்கஸ் பண்ணோம். உதாரணத்துக்கு மார்க்கெட் பைட் நல்லாருக்குன்னு அதிகமாக்கச் சொன்னோம், அப்புறம் மாத்துனாங்க, இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களைச் சொன்னோம்,” என்று லலித்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், லியோ படம் ஆயிரம் கோடி வசூலை பெற வாய்ப்பில்லை. ஹிந்தியில் படம் வெளியாகவில்லை. அதில் நல்ல லாபத்தை எதிர்பார்த்தோம்.‌

தமிழகத்திலிருந்து 2 லட்சம் பேர் அதிகாலை 4 மணி காட்சியை படம் பார்க்க பக்கத்து மாநிலங்களுக்கு போய்விட்டார்கள். விஜய் இதில் தலையிடவில்லை. அவர் என்னை நீதிமன்றத்தை அணுக சொன்னார். மற்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாக வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். ஆனால், அது நடக்கவில்லை’ என தெரிவித்தார்.லியோ படத்தின் சரிவுக்கு இவர்கள்தான் காரணம். அதுவும் விஜய் இந்த படத்தில் திரிஷாவுடன் லிப் லாக் சீன் வேண்டும் என்று அடம் பிடித்து கேட்டு வாங்கி இருக்கிறார். பக்கா ஆக்சன் படமாக லோகேஷ் லியோவை எடுக்க பார்த்திருக்கிறார். ஆனால் இந்த படத்தின் இரண்டாம் பாதியை சொதப்பிவிட்டனர். 40 நிமிஷம் பைட் சீன் தான் இருக்கிறது. இந்த பைட் சீன்க்கு குறைந்த காட்சிகளை மட்டுமே லோகேஷ் வைத்திருந்தார்,

ஆனால் லலித் வற்புறுத்துதலின் பெயரில் தான் அதை இன்னும் கொஞ்சம் நீட்டி விட்டிருக்கின்றனர். அவர் மட்டுமல்ல விஜய்யும் லோகேஷை அவர் போக்கில் விடாமல் இழுத்துப் பிடித்ததால் தான் இரண்டாம் பாதியில் அவருடைய அசிஸ்டன்ட் டைரக்டர் ரத்ன குமாரை எடுத்துச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அதனால் தான் படம் இவ்வளவு மோசமாக வந்திருக்கிறது.

இப்படி பல மாற்றங்களை விஜய் தரப்பிலிருந்து சொன்னதால்தான் இது முழுமையான லோகேஷ் கனகராஜ் படமாக இல்லாமல் தயாராகி வந்துள்ளது என சிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம், விஜய் இதற்கு முன்பு நடித்து வெளிவந்த ‘பீஸ்ட், வாரிசு’ ஆகியவை தரமான படமாக இல்லையென்பதால் விஜய் இந்தப் படத்தில் ஆலோசனைகளை மட்டுமே சொன்னார் என சிலர் சொல்கிறார்கள். மேலும் அப்போ நீங்களா சேந்து தான் லியோ பர்னிச்சரை உடைச்சீங்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

விஜய்யின் நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டரில் ஜொலித்திருப்பது ‘லியோ’வுக்கு வலு சேர்த்துள்ளது, அதே சமயம் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இரண்டாம் பாதி லோகேஷ் கனகராஜின் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மேத்யூ தாமஸ் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் அந்தந்த பாத்திரங்களுக்கு சிறந்ததை வழங்கியுள்ளனர், அதே நேரத்தில் அனிருத் ரவிச்சந்தரின் பின்னணி இசை பெரிய திரைகளில் தீயை ஏற்றியது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்