Thursday, June 13, 2024 5:12 pm

உண்மையிலேயே ஜோவிகாவின் அப்பா இவர் தான்! அவருடன் இன்னும் தொடர்பில் தான் இருக்கேன் ! வனிதா கூறிய அதிர்ச்சி உண்மை

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இல் ஜோவிகா மற்றும் விசித்ராவின் சண்டை பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாழ்க்கையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஜோவிகாவிடம் விசித்ரா வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருவரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். பிக்பாஸ் தமிழின் இளைய போட்டியாளரான ஜோவிகா தன்னை கேலி செய்ததாக நம்பினார்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியால் அங்கிருக்கும் போட்டியாளர்கள் குறித்த ஆச்சரிய தகவலும், அதிர்ச்சி தகவலும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி கொண்டே இருக்கிறது. கடந்த வாரத்தின் கண்டெண்ட் குயினான ஜோவிகா குறித்த சில தகவலும் றெக்கை கட்டி வந்துவிட்டது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. ஒரு வாரத்தினை கடந்த நிலையில் நேற்றைய வீக் எண்ட் எபிசோட்டில் அனன்யா ராவ் வெளியேறினார். போன வாரத்தில் முக்கிய விஷயமாக பேசப்பட்டது வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவின் கல்வி தான்.கல்வி அடிப்படை அதை நீ தெரிந்து வைத்திருக்க வேண்டும் என விசித்ரா பேச பிரச்னை பூதாகரமானது. நான் என்னை போல ப்ரஷரால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் பிரதிநிதியாக தான் இங்கு வந்திருக்கிறேன். எனக்கு பிடிக்கல கஷ்டப்பட்டு செய்ய முடியாது என ஜோவிகா வாதாடினார்.

அவரின் தாயான வனிதாவும் அவருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார். மேலும் ஜோவிகா எழுதி வாசித்த தமிழ் வீடியோ ஒன்றினையும் தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார். அதில் இந்த ஆடியோவை அவர் அப்பா அனுப்பி உடனே பதிவிடுமாறு கூறி இருந்ததாக குறிப்பிட்டார்.அப்போ லைவில் வந்த வனிதாவிடம் ஆகாஷுடன் இன்னமும் பேசுகிறீர்களா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வனிதா, எங்களுக்குள் பிரச்னை இருந்தது. அப்போ வயசு பிரச்னையால் அதனை செய்து விட்டோம். இப்போ பக்குவம் வந்து விட்டது. நாங்க பெற்றோர்கள். அதனால் பேசிக்கொண்டு இருக்கோம்.

ஜோவிகாவின் தந்தை ஆகாஷ், ஜெய்னிதாவின் தந்தை ராஜனுடனும் நான் இன்னமும் பேசிக்கொண்டு தான் இருக்கேன் என லைவில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் பிக்பாஸில் ஆகாஷ் வருவாரா? இல்லை ஃபேமிலி சுற்றில் வனிதா மட்டும் வருவாரா என எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.ஐஷு, அனன்யா, செல்லதுரை, கூல் சுரேஷ், ஜோவிகா, பிரதீப், ரவீனா தஹா மற்றும் யுகேந்திரன் போன்றவர்கள் பிக் பாஸ் தமிழ் 7 முதல் வாரத்தில் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவில் இருந்து யுகேந்திரன் வெளியேற்றப்படலாம் என்று ஆரம்பகால வாக்களிப்பு போக்குகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்