Wednesday, December 6, 2023 7:47 pm

மீண்டும் விஜய் உடன் மோதும் சிவகார்த்திகேயன் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிவகார்த்திகேயனின் அயல்நாட்டு அறிவியல் புனைகதை படமான ‘அயலான்’, அவரது கேரியரில் மிகவும் லட்சிய திட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் 6 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் உள்ளது மற்றும் இது ஆடம்பரமான VFX வேலைகளை உள்ளடக்கியது. அயலான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீபாவளி 2023 அன்று திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர். தற்போது ரிலீஸ் தேதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

அயலான் படத்தை ‘இன்று நேற்று நாளை’ புகழ் ஆர் ரவிக்குமார் இயக்குகிறார் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ், 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் பாண்டம் எஃப்எக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இன்று, அயலான் பொங்கல் 2024 அன்று பிரமாண்டமாக வெளியிட தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் குழு அறிவித்தது, மேலும் தாமதங்கள் எதுவும் இருக்காது என்று ரசிகர்களுக்கு உறுதியளித்தது. 2024 பொங்கலுக்கு வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதால், அயலான் டீசரை தற்போது வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் ரெடிகோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது அவரது 21வது படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். SK 21 என டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படம், அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிவகார்த்திகேயனின் அயலான் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய அயலான் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு, பட்ஜெட் பிரச்சினை போன்றவை காரணமாக கிடப்பில் போடப்பட்டது. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு முடிவுக்கு வந்தது. ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் இந்தியாவின் முதல் ஏலியன்ஸ் திரைப்படமாக அயலான் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அயலான் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால், கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை என்பதால், அயலான் தீபாவளி ரிலீஸில் இருந்து பின்வாங்கியது. மேலும், இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அயலான் தீபாவளிக்கு வெளியாகும் என காத்திருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இந்த அப்டேட் ஏமாற்றமாக அமைந்தது. இதனையடுத்து அவர்களை கூல் செய்வதற்காக அயலான் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே அயலான் ரிலீஸ் தேதி அப்டேட்டில், சில நொடி க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதற்கே கூஸ்பம்ஸ் ஆன ரசிகர்கள், இப்போது டீசரை ஆவலோடு எதிர்பார்த்துள்ளன்ர்.அதன்படி, அயலான் டீசர் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் விஜய்யின் லியோ ட்ரெய்லரும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 2ம் தேதி இல்லையென்றால், அக்டோபர் 7 அல்லது 8ம் தேதி அயலான் டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. டீசருக்கு கிடைக்கும் வரவேற்பைப் பெறுத்து அடுத்தடுத்து சில அப்டேட்களை வெளியிட அயலான் படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

ரிலீஸ் தேதியுடன் அயலான் டீசர் அப்டேட் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு டபுள் தமாகா தான். அயலான் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன், பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார், நீரவ் ஷாவின் டிஓபி மற்றும் எடிட்டிங் ரூபன். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்