Thursday, December 7, 2023 6:53 am

இயக்குனர் டூ ஹீரோவாக உருவெடுக்கும் அடுத்தடுத்த லைன்-அப்பில் மாஸ் காட்டும் லோகேஷ்!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது, ஜெயிலர் படத்தின் வெற்றியில் மூழ்கி வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், மீண்டும் ரஜினிகாந்துடன் இணையவுள்ளது. லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கும் லோகேஷ், இப்படத்தில் ரஜினிகாந்தை இயக்கவுள்ளார்.

இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. விக்ரம், லியோ ஆகிய படங்களில் லோகேஷ் உடன் பணிபுரிந்த அனிருத் ரவிச்சந்தர், வெளிவரவிருக்கும் படத்திற்கும் இசையமைக்கிறார். அனிருத், ரஜினியின் கடைசிப் படமான ஜெயிலருக்கு ஒரு ஹிட் ஆல்பம் மற்றும் பின்னணி இசையையும் வழங்கினார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்தப் படங்கள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் திரைப்பயணம் மாநகரம் படத்தில்தான் துவங்கியது. இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தி, கமல்ஹாசன், விஜய் என அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் கைக்கோர்த்து மிகச்சிறப்பான படங்களை கொடுத்துள்ளார் லோகேஷ். மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யுடன் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இடம்பெறுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர். ஆனால் அவற்றையெல்லாம் மீறி, தன்னுடைய படங்களை வெற்றிப் படங்களாக மாற்றி வருகிறார் லோகேஷ். கடத்ந ஆண்டில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான லோகேஷின் விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது.

இதையடுத்து தற்போது விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார் லோகேஷ். இந்தப் படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்துடன் தலைவர் 171 படத்தையும் இயக்க லோகேஷ் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு படத்திற்கும் மாஸான டைட்டில் டீசரை வெளியிடுவதை லோகேஷ் வழக்கமாக கொண்டுள்ள நிலையில், தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசருக்காக ரசிகர்கள் மரண மாஸாக வெயிட் செய்து வருகின்றனர்.

இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக கைதி 2 படத்தை லோகேஷ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் குறித்து லோகேஷ் மட்டுமில்லாமல் நடிகர் கார்த்தியும் அவ்வப்போது பேசி வருகின்றனர். இதையடுத்து, விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை மட்டும் மையமாக வைத்து ஒரு படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சூர்யாவுடனேயே முன்னதாக அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட இரும்புக்கை மாயாவி படமும் லோகேஷ் லைன் அப்பில் உள்ளது.

தொடர்ந்து தெலுங்கு நடிகர் பிரபாசுடன் லோகேஷ் இணையவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநராக அடுத்தடுத்து லோகேஷ் இந்தப் படங்களை இயக்கவுள்ள நிலையில், அடுத்ததாக நடிகராகவும் அவர் களமிறங்கியுள்ளார். ஆர்ஜே பாலாஜி லீட் கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து அனிருத்துடன் இணைந்து அன்பறிவ் இயக்கத்திலும் அவர் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

லியோ படத்திற்கு பின்பு இந்த படத்தின் சூட்டிங்கில் லோகேஷ் இணையவுள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளராகவும் பன்முகம் காட்டி வருகிறார் லோகேஷ். தமிழில் ராகவா லாரன்ஸ் -ரத்னகுமார் இணையும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளார் லோகேஷ். படத்தில் நயன்தாரா நாயகியாக கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து பாலிவுட்டிலும் மூன்று பெரிய ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.400 கோடியைத் தாண்டியிருக்கும் ஜெயிலரின் மகத்தான வெற்றியை சன் பிக்சர்ஸ் கொண்டாடுகிறது. சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன் சமீபத்தில் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கினார். ஜெயிலரில் பணிபுரிந்தவர்களுக்கு வெற்றிக் கூட்டத்தை நடத்தி தங்க காசுகளை வழங்கினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்