Monday, April 29, 2024 6:16 am

அஜித் செய்த விஷயத்தை விஜய் ஆண்டனி ஏன் அதை செய்ய தவறினார் !பிரச்சனைக்கு முக்கிய காரணமே இதுவா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் டீனேஜ் மகள் மரணம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் (நடிகர் சங்கம்) கண்டனம் தெரிவித்துள்ளது. “ஊடகங்களின் நடத்தை பலரை வெறுப்புடன் செயல்பட வைத்துள்ளது. இறுதிச் சடங்கின் போது ஊடகங்களில் உள்ள சிலர் எல்லா எல்லைகளையும் மீறிய விதம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது,” என்று நடிகர் சங்கம் செப்டம்பர் 21 வியாழன் அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

“ஒரு மகிழ்ச்சியற்ற சம்பவத்தைப் பற்றிய செய்தி சம்பந்தப்பட்டவர்களைச் சென்றடைவதற்கு முன்பே தவறான தகவல்களைப் பரப்புவது அல்லது ஏற்கனவே அதிர்ச்சியினாலும் சோகத்தினாலும் உடைந்த குடும்பத்திற்கு துயரத்தை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயமானது? உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க வந்த கலைஞர்கள் மீது ஊடக வெறியை திணிப்பது சரியா?” என்று அந்த அறிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.

மேலும், மகளைப் பறி கொடுத்த விஜய் ஆண்டனி மவுனம் காத்து வந்த நிலையில், திடீரென “என் மகளுடன் சேர்ந்து நானும் இறந்துவிட்டேன், அவளுக்காக நேரம் ஒதுக்கப் போகிறேன்; இனி அவள் பெயரில் செய்யப் போகும் நல்ல விஷயங்களை எல்லாம் அவளே தொடங்கி வைப்பாள்” என்று சோகம் கலந்த நெகிழ்ச்சியுடன் சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகரும் பத்திரிக்கையாளருமான, பயில்வான் ரங்கநாதன் விஜய் ஆண்டனி மகளின் இறப்பு குறித்தும், மீராவின் இறுதிச் சடங்கு வரை முற்றிலுமாக கவர் செய்த தனியார் ஊடகங்கள் குறித்தும் அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, மீராவின் இழப்பை ஏற்க முடியாமல் விஜய் ஆண்டனி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், பயில்வான் ரங்கநாதன் துளியும் இரக்கமின்றி வார்த்தைகளால் தாக்கியுள்ளார் அவர் கூறியதாவது;

“விஜய் ஆண்டனி தன்னுடைய படங்களுக்கு எமன், சைத்தான், காளி, திமிரு பிடிச்சவன் போன்று நெகட்டிவ் டைட்டில்களே வைப்பதால் தான், அவருடைய வாழ்க்கையிலும் நெகட்டிவ் விஷயங்கள் நடக்கின்றன. அதனால் தான் விபத்தில் சிக்கினார். தற்போது மகளும் இறந்து விட்டார்.” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, ரசிகர்கள் பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, மீண்டும் விஜய் ஆண்டனி பற்றிப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதாவது, நடிகர் விஜய் ஆண்டனியே, தன் மகளின் இறப்பு குறித்து “என் மகளுடன் நானும் இறந்து விட்டேன்” என சோஷியல் மீடியாவில் அனைவரும் அறிய பதிவிடும் போது, சினிமா பிரபலங்களின் மரணத்தை கேமராக்கள் படம்பிடிக்க கூடாது என்று சொல்வதற்கு தயாரிப்பாளர்களுக்கு என்ன தகுதி இருக்கு? என்று தயாரிப்பாளர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சமீபத்தில் நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணி அவர்கள் காலமானார். அப்போது, கேமராக்கள் வரவேண்டாம் என்று நடிகர் அஜித் கோரிக்கை விடுக்கவே, ஊடகங்களும் கேமராக்களில் படம் பிடிக்கவில்லை. அப்படி இருக்கையில், நடிகர் விஜய் ஆண்டனியும் அப்படி சொல்லியிருக்கலாம். ஆனால், அவரே கேமராக்கள் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், மற்ற திரையுலக பிரபலங்கள் ஏன் கொந்தளிக்கிரீர்கள் என்று கேட்டுள்ளார். அவரது இத்தகைய பேச்சு வழக்கம் போல பூதாகரமாக வெடித்துள்ளது.

இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினரையோ, ஆறுதல் கூற வந்த உறவினர்களையோ, உதவி செய்ய முயலும் கலைஞர் சமுதாய நண்பர்களையோ துன்பப்படுத்துவது எந்த வகையில் சரி. இறுதிச் சடங்கைக் கூட சரியாக முடிக்க முடியவில்லையா?

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இறுதிச் சடங்குகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல விரும்பும் ஊடக நண்பர்களின் நடவடிக்கைகளுக்கு என்ன வரம்புகள் உள்ளன? இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை பரிசீலிக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். ஊடகங்கள் “சுயக்கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும்” என்று அது குறிப்பிட்டது. அந்த அறிக்கையில், “எங்கள் நியாயமான கவலைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”

நடிகர் சங்கத்தின் தலைவராக மூத்த நடிகர் நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் உள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்