Thursday, April 18, 2024 9:13 am

கடைசி அந்த இரண்டு மணி நேரம் ! விஜய் ஆண்டனி மகள் ரூமில் இருந்த மாத்திரைகள் குறித்து பயில்வான் கூறிய திடுக்கிடும் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் தற்கொலை தமிழ் சினிமா துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மேலும் 16 வயதான அவர் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சோகமான இழப்பைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
மீரா, விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமாவின் மூத்த மகளாக 2007 இல் பிறந்தார். மருத்துவத் தொழிலைத் தொடர ஆசைப்பட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மீரா தனது படிப்பில் சிறந்து விளங்கினார், மேலும் அவர் சமீபத்தில் பள்ளியில் ஒரு குறிப்பிட்ட துறையின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாத்திமா விஜய் ஆண்டனி தனது பள்ளி சீருடையில் மீராவின் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மீரா கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அவர் செப்டம்பர் 19 அன்று அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்நிலையில், நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.அவர் கூறியதாவது, நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர் மூத்த மகள் மீரா இளைய மகள் லாரா மூத்த மகள் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.இந்நிலையில், தற்போது உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3 மணி அளவில் கண்விழித்த விஜய் ஆண்டனி தன்னுடைய மகளின் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய் ஆண்டனி கதறி அழுது இருக்கிறார். பின்னால் தனது உதவியாளர் உதவியுடன் மகளை மட்டும் கீழே மகளை மீட்டு கீழே இறக்கி உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனை அழைத்து சென்று இருக்கிறார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய் ஆண்டனி மக்கள் படிப்பில் கெட்டிக்கார மாணவி. சர்ச் பார்க் பள்ளியில் படித்து வருகிறார். அவருடைய இறப்பு செய்தி அறிந்த சக மாணவிகள் ஆசிரியர்கள் இதனை நம்ப முடியாமல் இருக்கின்றனர்.

தைரியமாக பேசக்கூடிய பழகக்கூடிய பெண்ணாக இருந்திருக்கிறார் மீரா. நன்கு படிக்கக்கூடியவர்.. நல்ல மார்க் எடுக்க கூடியவர்.. முதல் மாணவியாக இருந்திருக்கிறார்.. பள்ளி சார்ந்த பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.நான்கு மணி நேரம் விஜய் ஆண்டனியின் மகளுடைய உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இதில், சந்தேகத்திற்கிடமான எந்தவிதமான தடயங்களும் தென்படவில்லை.

அதனால், மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. உடற்கூறாய்வு செய்து அறிக்கை பெற்ற பின்னர் மகளின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்த விஜய் ஆண்டனி கதறி அழுதார்.

பிரேத பரிசோதனையில் சந்தேகத்திற்கு இடமாக எந்த விஷயமும் இல்லை என்பதை உறுதி செய்த போலீசார் அவருடைய அறையை சோதித்த போது அவர் மன அழுத்தத்திற்காக எடுத்துக் கொண்டிருந்த மாத்திரைகள் இருந்திருக்கின்றன.

அவருடைய கைப்பேசியை சோதித்த போது அதிலும் சந்தேகத்திற்குரிய எந்த விஷயங்களும் இல்லை. நள்ளிரவு ஒரு மணி அளவில் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு தூங்க சென்று இருக்கிறார் மீரா.

ஆனால், அந்த இரண்டு மணி நேரத்தில் என்ன நடந்தது..? என்று தெரியவில்லை. மூன்று மணிக்கு தவறான முடிவை எடுத்து கொண்டிருக்கிறார். உடற்கூறாய்வுக்கு பிறகு மகளின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய விஜய் ஆண்டனி பார்த்தபோது என் உடலெல்லாம் நடுங்கியது.

இந்த கஷ்டமான விஷயத்தை பேசும்போதே நாக்கு தழுதழுக்கிறது விஜய் ஆண்டனி போல ஒரு நல்ல மனிதருக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் படப்பிடிப்பில் ஒரு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து அவர் மீண்டு வருவதற்குள் தற்போது இப்படி ஒரு சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று பேசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

செப்டம்பர் 20ஆம் தேதி காலை மீராவின் உடல் தகனம் செய்யப்பட்டு கிறித்துவ முறைப்படி கீழ்ப்பாக்கம் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையில், மீராவின் வீட்டில் அவரது தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்தனர், மேலும் உணர்ச்சிகரமான கடிதம் “லவ் யூ ஆல், மிஸ் யூ ஆல்” என்ற மேற்கோளுடன் தொடங்கியதாக கூறப்படுகிறது. அந்தக் கடிதம் குறித்து போலீஸ் அதிகாரிகள் அதிகம் தெரிவிக்கவில்லை. மீராவின் தற்கொலை குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர், மேலும் விஜய் ஆண்டனியும் அவரது குடும்பத்தினரும் சமரசம் ஆனவுடன் சில நாட்களுக்குப் பிறகு அவர்களின் அடுத்த கட்ட விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்