Sunday, October 1, 2023 10:38 am

தளபதி விஜய் தொடர்ந்து ஷாருக்கானுக்கும் விபூதி அடித்த அட்லீ ! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

இயக்குனர் டூ ஹீரோவாக உருவெடுக்கும் அடுத்தடுத்த லைன்-அப்பில் மாஸ் காட்டும் லோகேஷ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக...

சத்யராஜ் நடிக்கும் வெப்பன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

தமிழ் சினிமாவில் 'கோபமான இளைஞன்' ஆளுமையின் உருவகமாக இருந்த நடிகர் சத்யராஜ்...

மோகன் சர்மா மீது கூலிப்படையினர் தாக்குதல் ! நடந்து என்ன அவரே கூறிய உண்மை

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் சர்மா மீது கூலிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்....

அட்டகத்தி பட புகழ் லப்பர் பந்து படத்தின் முதல் பார்வை இதோ !

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் லப்பர் பாண்டு படத்தில் நடிகர்கள் ஹரிஷ்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஷாருக்கானின் ‘ஜவான்’ இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெற்றி பெற்றது மற்றும் முதல் நாள் மிகப்பெரிய ஓப்பனிங்கைக் கண்டது. ‘ஜவான்’ அதன் தொடக்க நாளிலேயே சரித்திரம் படைத்ததால் படம் அனைத்து தரத்திலும் பிளாக்பஸ்டர் ஆகும். ‘ஜவான்’ தேசிய மற்றும் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் பறக்கிறது என்றும், வரும் நாட்களில் இன்னும் அதிகமாகக் கிளப்பும் என்றும் 2 ஆம் நாள் ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.‘ஜவான்’ படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப்படமாக இருக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. முதல் நாளில், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ‘ஜவான்’ ரூ 74.50 வசூலித்ததாக வர்த்தக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வியாழன் அன்று இந்தப் படம் ஹிந்தி பதிப்பில் 58.67 சதவீதத்தை ஒட்டுமொத்தமாகப் பெற்றது. பின்னர், SRK இன் மேலாளர் பூஜா தத்லானி, நாள் 1 இன் உலகளாவிய இறுதிப் புள்ளி விவரங்களைக் கைவிட்டார். இந்தப் படம், முதல் நாளிலேயே ரூ. 129.06 கோடி வசூலித்து, ஹிந்தித் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய தொடக்க நாளாக மாறியது!

வட மாநிலங்களில் ஷாருக்கான் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை போலவே தென் மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாள்களுக்கு ஷாருக்கான் படங்களுக்கு தென் மாநிலங்களிலும் நல்ல ஓப்பனிங்கை ஜவான் படம் ஆரம்பித்துள்ளது எனலாம். அரசாங்க அதிகாரிகளின் ஊழல் செயலில் பாதிக்கப்படும் அரசு ராணுவ வீரர்களுக்காக போராடும் நாயகன் (ஷாருக் கான்) மீது தவறான குற்றங்களை பதிவிட்டு அழிக்கின்றனர்.

இந்த குற்றங்களை எதிர்த்து பழிவாங்க அவரின் மகன் நாயகன் (ஷாருக் கான்) அரசு அதிகாரத்தை எதிர்த்து போராடுவதே இப்படத்தின் கதை. ஜவான் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்படுகிறது.
என்னதான் ஷாருக்கான், நயன்தாரா என பெரிய தலைகள் படத்தில் இருந்தாலும், அட்லி என்றாலே நெட்டிசன்களுக்கு, சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்த கதையாக நல்ல கன்டென்ட் கிடைத்துவிடும். அவர் எப்படி படம் எடுத்தாலும், அது எந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதை என்பதை சொடுக்கு விடும் நேரத்தில் அலசி ஆராய்ந்து பங்கம் செய்து விடுவார்கள்.

அட்லி பாலிவுட் வரை சென்று விட்டார், இனி அவருடைய லெவல் வேறு என நினைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றவர்களுக்கு, அவர் இன்னும் பழசை மறக்கவில்லை, இப்போது இந்தியில் வடை சுட்டு இருக்கிறார் அவ்வளவு தான் என்பது போல், படத்தின் கதை மொத்தமும் தமிழ் படங்களின் கதைகளில் இருந்து சுடப்பட்டது என தெரிந்து விட்டது. படம் ரிலீஸ் ஆகி கொஞ்ச நேரத்தில் எல்லாம், இது கேப்டன் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தில் கதையில் இருந்து சுடப்பட்டது என ட்ரோல் செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.

தற்போது அதையும் தாண்டி, ஜவான் படத்தின் தமிழ் வெர்ஷன் என சொல்லி சத்யராஜ் நடித்த தாய்நாடு படத்தை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகிறார்கள். சத்யராஜ் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான படம் தான் தாய் நாடு. இந்த படத்தில் எம் என் நம்பியார், ஜெய்சங்கர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தார்கள். இயக்குனர் அரவிந்த்ராஜ் இயக்கிய இந்த படத்தில் சத்யராஜ் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இந்த படத்தை தான் தற்போது ஜவானின் தமிழ் வர்ஷன் என்று சொல்லி வருகிறார்கள்.

மறுபக்கம் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் காப்பியாக இந்த படம் வந்துள்ளது என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஏகப்பட்ட படங்களின் இன்ஸ்பிரேஷனல் தான் இயக்குனர் அட்லி ஜவான் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எப்படி இருந்தாலும் வழக்கம்போல தனது படத்தை டாப் டக்கராக ரசிகர்களுக்கு ஏற்ற விசுவல் ட்ரீட்டாக இயக்குனர் அட்லி கொடுத்து அசத்தி விட்டார்.’ஜவான்’ செப்டம்பர் 7, 2023 அன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அட்லீ இயக்கத்தில், ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் நீட்டிக்கப்பட்ட கேமியோவில் காணப்படுகிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்