Saturday, April 27, 2024 3:25 pm

2023 FIFA மகளிர் கால்பந்து தொடர் : நியூசிலாந்து – நார்வே இன்று மோதல்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஆஸ்திரலேியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்தும் 9வது FIFA கால்பந்து மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் இன்று (ஜூலை 20) நியூசிலாந்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்நிலையில், இப்போட்டியில், ஆஸ்திரேலியா , நியூசிலாந்து , நடப்பு சாம்பியன் அமெரிக்கா, நார்வே, ஜெர்மனி, ஜப்பான், ஆசியக் கண்டத்திலிருந்து பிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான், வியட்நாம், தென் கொரியா உட்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த தொடரில் மொத்தம் 8 பிரிவுகளில் தலா 4 அணிகள் இடம்பெறும். இதில் ஒவ்வொரு பிரிவில் முதல் 2 இடத்தை பிடித்த அணி அடுத்தடுத்த இடத்திற்கு முன்னேறும். இதற்கான லீக் சுற்று இன்று முதல் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மதியம் நடக்கவுள்ள முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து – நார்வே அணிகள் மோதுகின்றன என’தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்