Thursday, May 2, 2024 6:58 pm

சர்பராஸ் கானுக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி ஆதரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தாண்டு நடைபெறும் மேற்குக்கிந்திய டெஸ்ட் தொடர் காரணமாக, இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதற்காக இந்திய அணியைத் தேர்வுக் குழு தேர்வு செய்து சில தினங்களுக்கு முன் இந்திய அணியின் வீரர்களை அறிவித்தது பிசிசிஐ. இதில் ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த தேர்வு குறித்து  பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி அவர்கள், “இளம் வீரர் சர்பராஸ் கான் கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சி தொடரில் தொடர்ந்து ரன்களை குவித்துள்ளார். அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும், அவருக்காக நான் வருந்துகிறேன். வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வதில் அவருக்குப் பிரச்சனை எனக் கூறுவதை நான் ஏற்க மாட்டேன் ” என அந்த வீரருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்