Tuesday, June 25, 2024 5:17 am

கேவலம் பப்ளிசிட்டிக்காக தளபதி விஜய் செய்த வேலை ! கழுவி ஊத்தும் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென்னிந்தியாவின் முன்னணி நடிகரான விஜய், தனது படங்களில் பிஸியாக இருப்பதால், நடிகர் விஜய்க்கு தந்தையுடன் தகராறு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. எவ்வாறாயினும், சலசலப்பைப் பொருட்படுத்தாமல், நடிகர் விஜய் கடைசியாக வெளியான ‘வரிசு’ ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகரை வரவேற்றார், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான தகராறு குறித்த அறிக்கைகளை முடக்கினார். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் சமீபத்தில் தங்களது 50வது திருமண நாளை கொண்டாடியதாக கூறப்படுகிறது, மேலும் நடிகரும் அவர்களுடன் சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.

கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் தந்தை SA சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக செய்திகள் வெளியானது. அந்தக் கட்சிக்கு தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா ஆகியோரின் பெயர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் செய்தியும் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து நடிகர் விஜய் அப்போது வெளியிட்ட வெளியிட்ட அறிக்கையில் என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவா்களின் அரசியல் கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மேலும் எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன். மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன் என்று விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை எச்சரிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதன் பின்பே விஜய் மற்றும் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை தொடர்ந்து, பின்பு விஜய் அவருடைய தந்தை மற்றும் தாய் இருவருடன் பேசுவதை நிறுத்தி கொண்டதாக கூறப்டுகிறது. இதன் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.

இப்படி விஜய் மற்றும் அவருடைய தந்தை இருவருக்கும் இடையிலான உரசல் தொடர்ந்து கொண்டே சென்ற நிலையில், விஜய் நடித்த வாரிசு படம் தந்தை மற்றும் மகனுக்கு இடையில் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது, விஜய் நிஜ வாழ்க்கையில் தாய் – தந்தையை விட்டு பிரிந்து வாழும் விஜய், சினிமாவில் தந்தை மீது பாசமாக இருப்பது போன்று நடித்துள்ளார், முதலில் நிஜ வாழ்க்கையில் விஜய் அவருடைய தாய் – தந்தையை மதிக்க வேண்டும் என வாரிசு படம் வெளியான போது விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் தற்பொழுது தன்னுடைய அரசியல் நகர்வுகளை சாதுர்யமாக நகர்த்தி வருகிறார் விஜய். மேலும் எதிர்காலத்தில் தனக்கு அரசியல் ரீதியாக, தன்னுடைய தாய் – தந்தை கூடவே விஜய் ஒற்றுமையாக இல்லை என்கிற விமர்சனத்தாய் தவிர்க்கவே, சமீபத்தில் விஜய் அவருடைய தாயை சந்தித்து புகைப்படம் எடுத்து அதை வெளியிட செய்துள்ளார் விஜய், ஆனால் விஜய் இன்னும் அவருடைய தந்தை உடன் சமரசமாக வில்லை என்றும்.

அதனால் தான் விஜய் அவருடைய தந்தை உடன் இணைந்து புகைப்படம் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், என்ன விஜய் இது, அம்மா வேண்டும், அப்பா வேண்டாமா.? இது உஙக்ளுக்கே நியாமா.? விஜய் அம்மா உடன் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.

கேங்ஸ்டர் ஆக்‌ஷன் நாடகமான ‘லியோ’ படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் விஜய் கைகோர்த்துள்ளார், மேலும் படத்தின் தற்போதைய ஷெட்யூல் சென்னையில் நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக் கட்டத்தைக் கடந்து, தயாரிப்பாளர்களின் திட்டப்படி சீராக நடந்து வருகிறது. விஜய் ஒரு கேங்ஸ்டராகக் காணப்படுவார் என்றும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 22 ஆம் தேதி முன்னணி நடிகரின் பிறந்தநாளில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்