Sunday, May 28, 2023 6:46 pm

சமந்தாவுக்கு கோயில் கட்டும் ஆந்திர ரசிகர்..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

கேரளா ஸ்டோரி பற்றி மனம் திறந்து பேசிய கமல்

இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன்....

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா ? லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கானின்...

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...
- Advertisement -

இந்திய சினிமாவுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வெற்றி பெற்றவர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டத்தின் அருகே அலபாடு கிராமத்தை சேர்ந்த தெனாலி சந்தீப் எனும் ரசிகர் தனது வீட்டிலேயே நடிகை சமந்தாக்கு கோயில் கட்டி வருகிறார்.

இதுகுறித்து பேசிய ரசிகர் சந்தீப் அவர்கள், நடிகை சமந்தா பிரத்யூஷா என்னும் அறக்கட்டளையின் மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து எனக்கு அவர் மீது மதிப்பு கூடியது. அதனால் தனது வீட்டின் பாதி இடத்திலேயே அவரது கோயிலை கட்டி வருகிறேன். இதன் இறுதி கட்ட வேலை தற்போது நடந்து வருவதாகவும், இதன் திறப்பு நாளை நடைபெறும் என கூறியுள்ளார்.

மேலும், ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகைகளுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் முதற்ட்டமாக நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர். இதனையடுத்து நடிகை நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, நமீதா உள்ளிட்டவருகளுக்கு ரசிகர்கள் கோவில் காட்டினர். ஆகவே, தற்போது நடிகை சமந்தாவும் வரிசையில் இணைந்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்