Thursday, June 8, 2023 4:42 am

AK62 படத்தை ரிவர்ஸ் கியர் போட்டு எடுக்கும் மகிழ் திருமேனி .! ஓகே சொன்ன அஜித்.

spot_img

தொடர்புடைய கதைகள்

போர் தொழில் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடித்துள்ள போர் தோழில் ஜூன் 9...

தோனி தயாரித்த முதல் படமான எல்ஜிஎம் படத்தின் டீசர் இதோ !

ஹரிஷ் கல்யாண் தனது வரவிருக்கும் எல்ஜிஎம் படத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தார். படத்தின்...

ஜெயம் ரவியின் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி இதோ !

இத்திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இறைவன்...

போர் தோழில் படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

போர் தோழில் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது. வெளியீட்டிற்கு...
- Advertisement -

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும் இந்த செய்திக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மகிழ் திருமேனி படத்திலும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், துனிவு ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் ‘ஏகே 62’ என்ற தலைப்பில் அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ தலைப்புடன் வெளியிட காத்திருக்கிறார்கள். AK 62, நாம் அனைவரும் அறிந்தபடி, விக்னேஷ் சிவனுடன் தொடர்புடையது, இப்போது அவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதால், படத்தின் சரியான தலைப்புடன் வெளியீட்டு விழா இருக்க வேண்டும் என்று குழு கருதியது.

இந்நிலையில் அஜித் 62 பட அப்டேட் எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இதுபற்றி லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜி கே எம் தமிழ்க்குமரன் சமீபத்தில் அப்டேட் ஒன்றை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசும்போது வெளியிட்டுள்ளார். அதில் “நல்ல செய்தி இந்த மாதம் வரும்” எனக் கூறியுள்ளார்.

முதலில் தீபாவளி அல்லது இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஷூட்டிங் தாமதம் ஆவதால் இந்த படம் அடுத்த ஆண்டுதான் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் அதிரடியாக உடல் எடையைக் குறைத்து இருந்தாலும் வயதான தோற்றத்தில் தான் தெரிகிறார் அதனால் நிச்சயம் இந்த படத்தில் அஜித் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மகிழ்திருமேனி ஏற்கனவே அஜித்திடம் மூன்று கதைகளை முதலில் சொல்லி உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அதில் முதல் கதையை தற்போது படமாக எடுத்து வருகிறாராம் இந்த படத்தில் அஜித் இளமை மற்றும் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முதலில் வயதான தோற்றத்தை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம். அதை முடித்துவிட்டு பின் இளமையான அஜித்தை வைத்து படத்தை எடுக்கலாம் என கூறப்படுகிறது இதனால் ரிவர்ஸ் கியர் போட்டு அஜித்தின் 62 படத்தை எடுக்க இருக்கிறார் மகிழ்திருமேனி.

- Advertisement -

சமீபத்திய கதைகள்