Sunday, May 28, 2023 6:40 pm

வெறித்தனமாக உருவாகும் AK 62 லேட்டஸ்ட் அப்டேட்டை கண்டு மிரண்ட அஜித் ரசிகர்கள்.!

spot_img

தொடர்புடைய கதைகள்

கேரளா ஸ்டோரி பற்றி மனம் திறந்து பேசிய கமல்

இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன்....

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா ? லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கானின்...

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...
- Advertisement -

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும் இந்த செய்திக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மகிழ் திருமேனி படத்திலும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், துனிவு ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித் 62 பட அப்டேட் எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இதுபற்றி லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜி கே எம் தமிழ்க்குமரன் சமீபத்தில் அப்டேட் ஒன்றை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசும்போது வெளியிட்டுள்ளார். அதில் “நல்ல செய்தி அடுத்த மாதம் வரும்” எனக் கூறியுள்ளார்.

முதலில் தீபாவளி அல்லது இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஷூட்டிங் தாமதம் ஆவதால் இந்த படம் அடுத்த ஆண்டுதான் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் சண்டைக் காட்சிகள் மிரட்டலாக இருக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ள இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் ஸ்டன்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் இணைந்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படத்தில் சண்டை காட்சிகள் மிரட்டலாக இருந்தது போல் இந்த திரைப்படத்திலும் மாஸ் ஸ்டன்ட் காட்சிகள் அமையும் என தெரிகிறது.

துணிவு படத்தின் வெற்றிகளை தொடந்து முதல் முறையாக இணைந்துள்ள இக்கூட்டணியின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இறுதி கட்ட க்ரிப்ட் பணியில் பிசியாக ஈடுபட்டு வரும் இயக்குனர் மகிழ்திருமேனி இந்த படத்தில் இணையவுள்ள இதர நடிகர் -நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வின் மீதும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டன்ட் (சண்டை பயிற்சி) இயக்குனராக அனல் அரசுவை தேர்வு செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இவர் கருப்பசாமி குத்தகைதாரர், வந்தே மாதரம், தெனாவட்டு, சிங்கம் I &II, நான் மகான் அல்ல, ரௌத்திரம், வேலாயுதம், வெடி, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பட்டது யானை, ஜில்லா, கத்தி, தடையற தாக்கா, ஐ, ரெமோ, பாண்டிய நாடு, பைரவா, சிவலிங்கா, வேலையில்லா பட்டதாரி 2, மெர்சல், வேலைக்காரன் போன்ற பல வெற்றி படங்களில் அதிரடி சண்டை காட்சிகளை வடிவமைக்க ஸ்டென்ட் மாஸ்டராக பணிபுரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஸ்டென்ட் ஒருங்கிணைப்பாளர் விருதினை கருப்பசாமி குத்தகைதாரர் மற்றும் வந்தே மாதரம் படத்தின் மூலம் முதல் முறையாக பெற்றிருந்தார். அதன் பின்னர் நான் மகான் அல்ல – ஆனந்த விகடன் மற்றும் விஜய் விருது, ரௌத்திரம் – ஆனந்த விகடன், தடையற தாக்கா – சிறந்த சண்டை இயக்குனர் ஆனந்த விகடன் மற்றும் விஜய் விருது, பாண்டிய நாடு – விஜய் விருது, கத்தி – சர்வதேச சிறந்த சண்டை பயிற்சி வீரர் போன்ற பல படங்களின் மூலம் அதிகளவு விருதினை பெற்றுள்ளார்.

‘ஏகே 62’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளதாகவும், காஜல் அகர்வால், அருள்நிதி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் நமக்குத் தெரியும். அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

‘ஏகே62’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், ‘ரைடு ஃபார் மியூச்சுவல் ரெஸ்பெக்ட்’ என்ற தனது உலக பைக் சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கப்போவதாக அஜித் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்