Thursday, March 30, 2023

உடல் எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிய ரோபோ ஷங்கர் !

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

சின்னத்திரையில் மிமிக்ரி செய்து பேமஸ் ஆனவர் ரோபோ சங்கர். இவரின் திறமையை பார்த்து வியந்துபோன சினிமா பிரபலங்கள் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பளித்தனர்.அதன் படி அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து காமெடியனாக உயர்ந்துள்ளார்.

இவரது மகள் இந்திரஜாவும் தற்போது சினிமாவில் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இவர் முதன்முதலில் விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்கிற கேரக்டரில் நடித்தார். இதையடுத்து கார்த்தி – அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன விருமன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து இந்திரஜாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இப்படி தந்தையும், மகளும் சினிமாவில் பிசியாக இருப்பதை போல் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா, அதில் தனது தந்தையுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

அதற்கு காரணம் ரோபோ சங்கரின் தோற்றம் தான். நன்கு கட்டுமாஸ்தான் போல் இருந்த ரோபோ சங்கர் தற்போது உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்த தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், அவர் படத்துக்காக உடல் எடையை குறைத்தாரா அல்லது ஏதேனும் உடல்நல பாதிப்பால் அவருக்கு இவ்வாறு உடல் எடை குறைந்துவிட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய கதைகள்