Saturday, April 1, 2023

அதிரடியாக லியோவில் இணைந்த 5-வது புது வில்லன்! சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுக்கும் லோகேஷ்

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். திரைப்பட தயாரிப்பாளர்கள் டைட்டில் டீசரை வெளியிட்டு, படத்தின் முழு நடிகர்களையும் வெளியிட்ட பிறகு ஜனவரி 30 முதல் படம் தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது.

தற்போது சோசியல் மீடியாவை திறந்தாலே லியோ திரைப்படத்தை பற்றிய பேச்சு தான் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் இப்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் மீடியாவில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரிக்க வைக்கிறது.

போதாத குறைக்கு படத்தில் இருக்கும் நட்சத்திர பட்டாளங்களும் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது லியோ திரைப்படத்தில் புது வில்லன் ஒருவர் களமிறங்கி இருக்கிறார். ஏற்கனவே இதில் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதில் சஞ்சய் தத் மெயின் வில்லன் என்பது அனைவருக்கும் தெரியும்.

சமீபத்தில் கூட அவர் காஷ்மீரில் விஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வரும் போது எடுக்கப்பட்ட போட்டோ வைரலானது. அவரைத் தொடர்ந்து படத்தில் இன்னும் மூன்று வில்லன்கள் இருக்கிறார்கள். இப்படி நான்கு வில்லன்கள் இருக்கும் நிலையில் ஐந்தாவதாக ஒரு முரட்டு வில்லனும் படத்தில் இணைந்திருப்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

அந்த வகையில் லோகேஷின் மாநகரம் திரைப்படத்தில் நடித்திருந்த மதுசூதன் ராவ் தற்போது லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் இவர் கோலிசோடா திரைப்படத்தின் மூலம் அதிக பிரபலமானார். தற்போது இவரும் லியோ டீமில் சேர்ந்துள்ளது பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த பல விஷயங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. அதிலும் பலர் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று இப்போதே கேலண்டரில் தேதிகளை கிழிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் லோகேஷ் இன்னும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.

அந்த வகையில் விஜய் ரசிகர்களே போதும் என்ற அளவிற்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள் வர இருக்கிறது. பொதுவாக ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்புதான் பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த லியோ பூஜை போடுவதற்கு முன்பிருந்தே ஒரு வைப்ரேஷனை உருவாக்கி இருந்தது. அதில் அடுத்தடுத்த முன்னணி நட்சத்திரங்களும் படத்தில் இணைந்து வருவது பலரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.

படத்திற்கான தற்போதைய தோற்றத்தை இறுதி செய்வதற்கு முன்பு விஜய் 30 வித்தியாசமான தோற்றங்களை முயற்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பில் சஞ்சய் தத் இணைந்துள்ளார். முன்னதாக, மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் படத்தில் தங்கள் பாகங்களுக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினர்.

‘லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 19, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும்.

சமீபத்திய கதைகள்