29.4 C
Chennai
Sunday, March 26, 2023

பிரபல இசையமைப்பாளர் மீது நெருக்கம் காட்டும் மூத்த மகள் ஐஸ்வர்யா! நிம்மதியின்றி தவிக்கும் ரஜினிகாந்த்..

Date:

தொடர்புடைய கதைகள்

‘லியோ’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் நீண்ட ஷெட்யூல்...

சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

நாட்டின் மிகப்பெரிய கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா, அதிக ரசிகர்களைக் கொண்டவர். அவர்...

பத்து தல படத்தின் ‘ரவுடி’ வீடியோ பாடல்...

சிலம்பரசன் நடித்த 'பாத்து தலை' படம் மார்ச் 30 ஆம் தேதி...

தனது தந்தை இறந்த துக்கத்தில் அஜித் செய்த அந்த...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

வரலக்ஷ்மி ஆரவ் நடிக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

அவரது சமீபத்திய குற்ற நாடகம் கொண்டரால் பாவம் வெற்றிக்குப் பிறகு, வரலட்சுமி...

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தியுள்ளார், மேலும் அவர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ‘லால் சலாம்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது, மேலும் படத்தின் முஹுரத் பூஜை டிசம்பர் மாதம் சென்னையில் நடந்தது. தற்போது, லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது. ‘லால் சலாம்’ படத்தின் முக்கிய படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது, படத்தின் படப்பிடிப்பில் படத்தின் முன்னணி நடிகர்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் இணைந்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் சென்னைக்காக விளையாடுவதால், முன்னணி நடிகர்களும் வார இறுதியில் ஓய்வு எடுப்பார்கள்.

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த வருடம் ஒரு மனதாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான வாய்ப்பு இனி இல்லை என்பது போன்று அமைத்தது தனுஷ் புதிய வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்வு. ஆம், தனுஷ் புதிய வீட்டின் கிரக பிரவேச நிகழ்வில் மனைவி ஐஸ்வர்யா உட்பட ரஜினிகாந்த் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளாதது இனி ஐஸ்வர்யா – தனுஷ் இணைவதற்காக வாய்ப்பு இல்லை என்பதை உறுதி படுத்தியது.

இந்நிலையில் ஏற்கனவே அநிருத் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிசு கிசுவில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்கள், மேலும் தனுஷ் – அனிருத் இருவரும் சில வருடங்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பேசாமல் இருந்து வந்தனர், இந்த நிலையில் மீண்டும் அநிருத் உடன் நெருக்கமாக பழகி வரும் ஐஸ்வர்யா, சமீப காலமாக அநிருத் ஸ்டுடியோவுக்கு அடிக்கடி சென்று வருகிறார்.

மேலும் பெருபாலான நாட்கள் அநிருத் ஸ்டுடியோவில் தங்கி விடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், அப்படி இருக்கையில், எதற்காக அனிருத் ஸ்டுடியோவுக்கு அடிக்கடி செல்லும் ஐஸ்வர்யா அங்கேயே பெரும்பாலும் தங்கி விடுகிறார் என்கிற குழப்பம் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுவாக உருவெடுத்தது.

இந்த கிசு கிசு, ரஜினியின் கவனத்துக்கு வந்ததை தொடர்ந்து, ஏற்கனவே அனிருத் உடன் மகள் ஐஸ்வர்யா நெருக்கமாக இருந்து அது பிரச்சனையாக உருவெடுத்ததை அறிந்த ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யாவை இது குறித்து மிக கடுமையாக கண்டித்துள்ளார், ஆனால் அநிருத் இசையில் ஒரு பாடல் பட இருக்கிறேன், அதனால் அடிக்கடி அங்கே செல்கிறேன் என ஐஸ்வர்யா தெரிவிக்க, முதலில் லால் சலாம் படத்தில் மட்டும் கவனம் செலுத்து என கடுமையாக ரஜினிகாந்த் மகளிடம் அவருடைய கோபத்தை வெளிப்டுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அநிருத் பிரச்சனை முடிந்த அடுத்த சில நாட்களில் அடுத்த பிரச்சனையாக ரஜினிக்கு மிக பெரிய தலைவலியாக அமைத்துள்ளது பிரபு தேவா – ஐஸ்வர்யா விவகாரம், கணவரை விவகாரத்து செய்து விட்டு கவர்ச்சி உடையில் தீவிர உடல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஐஸ்வர்யா, அந்த புகைப்படங்களை அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.

ஏற்கனவே யோக கற்று கொண்டு வந்த ஐஸ்வர்யா, தொடர்ந்து யோக பயிற்சியில் ஈடுபட்டு வந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார், அப்போது யோக மாஸ்டர் ஒருவருடன் கிசு கிசுக்க பட்ட ஐஸ்வர்யா, தற்பொழுது நடிகர் பிரபு தேவா உடன் நெருக்கமாக பழகி வருவது மற்றும், அவருடன் இணைந்து உடற் பயிற்சி செய்து வருவது, தற்பொழுது பிரபு தேவா உடன் கிசு கிசுக்கப்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா.

இந்த நிலையில் தொடர்ந்து தன்னுடைய மகள் பற்றி வரும் கிசு கிசு செய்திகளால் மகள் மீது செம்ம டென்ஷனில் இருக்கும் ரஜினிகாந்த், அவ்வ போது மன நிம்மதிக்காக முன்பை விட அதிக நேரம் தியானம் செய்து வருவதாக கூறப்டுகிறது.மேலும் மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என ரஜினிகாந்த் ஆசையை நிறைவேற்ற வில்லை என்றாலும் கூட, ஐஸ்வர்யாவின் சில நடவடிக்கைகள் ரஜினியை மனவேதனை அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜீவிதா ராஜசேகர் 33 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகையாக மீண்டும் வருவதற்காக ‘லால் சலாம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் அவர் படத்தில் ரஜினிகாந்தின் சகோதரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மூத்த நடிகை ‘லால் சலாம்’ படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார், மேலும் அவர் முதல் முறையாக ரஜினிகாந்துடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ள உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், இப்படம் பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கதைகள்