28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

அஜித் நோ சொன்ன சொன்ன கதையில் வாழ்க்கையை பெற்ற பிரபல நடிகர்களின் லிஸ்ட் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

‘துணிவு’ மெகா பிளாக்பஸ்டரை வழங்கிய அஜித் குமார், ‘ஏகே 62’ படத்திற்கான ஸ்கிரிப்டை இறுதி செய்வதிலும், தனது குடும்பத்துடன் விடுமுறை எடுப்பதிலும், பைக்கில் தனது உலகச் சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டத்தைத் திட்டமிடுவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், விமான நிலையத்தில் அஜித்தின் சமீபத்திய புகைப்படம் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாஸ் ஹீரோ, வெளிர் நீல நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து குளிர்ச்சியான உடையில் அழகாக இருக்கிறார். அவர் பெரும்பாலும் நரைத்த தாடி மற்றும் மீசையுடன் தனது ஸ்வாக்கிற்கு இசைவாக இருக்கிறார். இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரும் ‘ஏகே 62’ படத்தின் புதிய கெட்அப்பாக இது இருக்கலாம் என ரசிகர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஊகித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் நாயகனாக வலம் வருபவர் அஜித். சமீபகாலமாக அஜித் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே கோடிகளில் வசூல் சாதனை செய்து வருகின்றனர்.

ஆனால் அஜீத் தனது ஆரம்ப காலகட்டங்களில் பல தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளார். அதே சமயத்தில் தனக்கு வந்த கதைகளை வேண்டாம் என்று கூறி பின்னர் அதே கதைகளில் மற்ற நடிகர்கள் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற படங்களும் உள்ளது.

விஜய் அஜித் நடிப்பில் முதலில் உருவான படம்தான் நேருக்கு நேர். சிறிது நாட்கள் அஜித் இந்த படப்பிடிப்பில் நடித்து விட்டு பின்னர் சூர்யா நடித்தது குறிப்பிடத்தக்கது. அன்றைய நாட்களில் இந்த படம் செம ஹிட் அடித்தது.

அதே போன்று மீண்டும் விஜய் நடிப்பில் செம ஹிட் அடித்த படம் லவ் டுடே. இந்த படமும் முதலில் அஜித்துக்காக எழுதப்பட்டது. அதைப்போல் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா, நான் கடவுள் போன்ற இரண்டு படங்களுமே அஜித்துக்காக தான் எழுதப்பட்டன.

மேலும் மாதவன் நடித்த ரன், சூர்யா நடித்த காக்க காக்க மற்றும் கஜினி, ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் இரட்டை நடிப்பில் கலக்கிய ஜீன்ஸ் போன்ற படங்களும் முதலில் அஜித்தை மனதில் வைத்து எழுதப்பட்ட கதைகள் தான்.

ஆனால் இந்த கதைகளை தவறவிட்டு விட்டோம் என ஒரு நாளும் அஜித் வருத்தப்பட்டது இல்லையாம். எப்போதுமே ஒன்றைவிட ஒன்று பெஸ்ட் ஆக இருக்கும் என நம்புபவர் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு இறுதியில் ‘AK 62’ முடித்த பிறகு, அஜித் தனது உலக பைக் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார், அது “பரஸ்பர மரியாதைக்காக சவாரி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம் அனைத்து கண்டங்கள் மற்றும் உலகின் முக்கிய நகரங்களை உள்ளடக்கும் என்றும், முடிக்க சுமார் 18 மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்திய கதைகள்