Friday, April 19, 2024 5:31 am

போடுறா வெடிய AK 62 படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகர்.! தெறிக்க விடலாமா

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமாரின் ஏகே 62 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம், ஆனால் தமிழ் நட்சத்திரம் அல்லது லைகா புரொடக்ஷன்ஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு செய்தியும் இல்லை. மார்ச் 6 ஆம் தேதி, AK 62 படப்பிடிப்பிற்குப் பிறகு தனது உலக பைக் சுற்றுப்பயணத்தை எவ்வாறு புறப்படப் போகிறார் என்பது குறித்து தனது அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் மூலம் அஜித்குமார் அறிவித்தார்.

அஜித் நடிப்பில் வெளியான துணிவு படமானது வாரிசு உடன் மோதிய நிலையில் தற்பொழுது இரண்டு ஹீரோக்களும் அவர்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். ஆனால் ஏகே 62 திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் மிக கவனமாக காய் நகர்த்தி வருகிறார் அஜித். இதனால் தான் படப்பிடிப்பு தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்பொழுது விஜய் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்திற்கான படப்பிடிப்பானது படு ஜோராக நடந்து வருகிறது. ஆனால் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 படத்திற்கு மகிழ் திருமேனி இயக்குனராக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான செய்தியை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து படத்தின் கதையை முடிவு செய்வதிலேயே பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளார். ஏற்கனவே விக்னேஷ் சிவனால் ஏற்பட்டுள்ள குளறுபடியால், தற்பொழுது அஜித் தனது படத்தின் வெற்றிக்காக ஒவ்வொரு அடியையும் கவனமாக மேற்கொண்டு வருகிறார்.

ஏனென்றால் ஏற்கனவே இவரிடம் ஆன்லைனில் படத்தின் கதையை கேட்டு ஓகே செய்துள்ளார் அஜித். ஆனால் அவை பிடிக்காமல் போனதால் இவர் நடிக்கும் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளார். இதனால் இந்த முறை எந்தத் ஒரு தவறும் நடக்கக்கூடாது என்று படத்தின் முழு கதை, வசனம் என அனைத்தையும் அலசி ஆராய்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

இதனைத் தொடர்ந்து மறுபடியும் எந்த குளறுபடியும் நடக்காத வண்ணம் அஜித் காய் நகர்த்தி வருகிறார். மேலும் படத்தினை பற்றி முழுமையாக உறுதி செய்த பிறகே அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருந்து வருகிறார். இதனால்தான் ஏகே 62 படத்தை பற்றிய அதிகாரபூர்வமான தகவலானது இன்னும் வெளிவராமல் இருக்கிறது.

இன்னும் ஒரு வாரத்தில் கண்டிப்பாக அனைத்து பணிகளும் முடிவடைந்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அதற்கான வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் காரணம் அஜித் தான் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இதனை அடுத்து இப்பொழுது வீரம்,வேதாளம், ஆகியபடத்தில் நடித்த பிரபல நடிகரான தம்பி ராமாவும் தற்பொழுது அஜித் 62 படத்தில் இணைந்துள்ளார் இவர் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் என தகவல் கசிந்துள்ளன அதனால் அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்

AK 62 ஐப் பொறுத்தவரை, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார் மற்றும் துனிவு ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா திட்டத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.AK62 இன் திசை மாற்றத்துடன், படத்தின் கதைக்களம் மற்றும் நடிகர்கள் பற்றி மேலும் அறியும் வரை நாம் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.

இந்த திட்டத்திற்கான இசையை அனிருத் கையாளுவார் என்பதும், தூம், வான்டட் மற்றும் 2.0 போன்ற படங்களில் பணிபுரிந்த நீரவ் ஷா ஒளிப்பதிவுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதும் எங்களுக்குத் தெரியும்..

- Advertisement -

சமீபத்திய கதைகள்