போதைக்கு எதிரான “ஒரு கோடி கையெழுத்து” இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (பிப்ரவரி 25) கையெழுத்திட்டுள்ளார்.
மாநிலத்தில் போதைப் பழக்கம் அதிகரித்து வருவதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி “ஒரு கோடி கையெழுத்து” என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களை சந்தித்து போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஒரு கோடி பேர் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
மேலும், போதைப் பொருள் பழக்கத்துக்கு எதிராக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.