Saturday, April 13, 2024 5:58 pm

அஜித்திடம் மகிழ் திருமேனி சொன்ன 2 கதை Ak62 அப்டேட் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

AK 62 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள அஜீத் குமாரின் அடுத்த படத்தின் அறிவிப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த திட்டம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டதற்கு பல காரணங்கள் இருப்பதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.

சினிமா படங்களில் கூட வராத ட்விஸ்ட்டாக அஜித்தின் ஏகே 62 படத்தை நான் தான் இயக்கப் போகிறேன் என ரொம்பவே நம்பிக் கொண்டிருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் திடீரென மாற்றப்பட்டது ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே ஷாக் ஆக்கியது. படம் ஃபிளாப் ஆனாலே இன்னொரு படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுக்கும் அஜித் ஏன் விக்னேஷ் சிவனுக்கு முதல் வாய்ப்பை கூட கொடுக்காமல் நிராகரித்தார் என்கிற கேள்வி எழுந்தது.

அஜித்தின் ஏகே 62 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் விஜய்யின் லியோ படத்துடன் மோத தரமான ஆக்‌ஷன் படத்தை கொடுக்கவே அதிரடியாக விக்னேஷ் சிவனை மாற்றி விட்டனர் என்றும் பேச்சுக்கள் கிளம்பி வருகின்றன. ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார் என்று இதுவரை லைகா நிறுவனம் அறிவிக்காத நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62வை தனது பயோவில் இருந்து நீக்கிய நிலையில், அந்த தகவல் உறுதியானது தான் என தெரிய வந்தது.

விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி தான் இயக்கப் போகிறார் என்றும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை இந்த தகவலை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளுக்கு நடிகர் அஜித் சுற்றுலா செய்து வந்த நிலையில், அவரது புகைப்படங்களை மனைவி ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வந்தார். இந்நிலையில், நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி உள்ளன.

வெளிநாட்டில் டூர் அடித்து வந்த நடிகர் அஜித் தனது சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளதாக சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் சில ரசிகர்களுடன் நடிகர் அஜித் குமார் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், தகவல்கள் கசிந்துள்ளன.

ஏகே 62 படத்தின் அறிவிப்பு காதலர் தினத்துக்காவது வரும் என எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போன அஜித் ரசிகர்கள், நடிகர் அஜித் சென்னை திரும்பி விட்டார் என்கிற செய்தி கேட்டதுமே, அப்போ ஏகே 62 அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சந்தோஷத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்திடம் இரண்டு ஸ்கிரிப்ட் மகிழ் திருமேனி கூறியதாகவும் சொல்லப்படுகிறது .ஒரு கதையானது பேமிலி மற்றும் ஆக்ஷன் ஜானரில் இருக்கும் கதை கரு என்றும் மற்றொன்று ஸ்பை திரில்லர் கதை அஜித்திடம் சொல்லப்பட்டதாகவும் இரண்டுமே அஜித்திற்கு பிடித்து உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் கிசு கிசுப்படுகிறது

உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த துணிவு, சமீப காலங்களில் மிகப்பெரிய தமிழ் வெற்றிப்படங்களில் ஒன்றாகும். மற்றுமொரு பொங்கல் படமான வரிசும் பாக்ஸ் ஆபிஸில் தங்கம் அடித்தது. இரண்டு படங்களும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றி கண்டன. வரிசு ஒரு குடும்ப பொழுதுபோக்காக இருந்தாலும், துணிவு என்பது ஒரு வலுவான சமூக செய்தியைக் கொண்ட பணத்தை கொள்ளையடிக்கும் கதையாகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்