Thursday, March 30, 2023

படுஜோராக ஆட்டத்தை தொடங்கிய அஜித் !! அனல் பறக்க லண்டனில் நடக்கும் அடுத்த கட்ட வேலை

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் குமாரின் புதிய படமான ‘ஏகே 62’ படம் சூழ்ந்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்குனராகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் இணைந்து இந்த திட்டம் பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சில வாரங்களுக்கு முன் தெரியாத காரணங்களால் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ‘தடம்’ புகழ் மகிழ் திருமேனி இயக்கினார் .

‘ஏகே 62’ படத்தின் இயக்குனர் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சமூக ஊடகங்களில் புயலை கிளப்பும் மாஸ் மோடில் அஜித் நடிக்கும் திட்டத்திற்கான ப்ரோமோ வீடியோ ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் இப்போது சலசலப்பு நிலவுகிறது.

இதோ அதோ என்று பல அலப்பறைகளுக்கு நடுவே ஒரு வழியாக ஏகே 62 திரைப்படத்திற்கு இயக்குனர் சிக்கிவிட்டார். துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக நடித்திருக்கும் ஏகே 62 திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்தப் படத்தை யார் தான் இயக்கப் போகிறார்கள் என்ற குழப்பம் மட்டும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்ட நிலையில் அவர் இந்தக் கூட்டணியில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வந்தது. அதில் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்தது. ஆனால் இவை எல்லாம் வெறும் யூகங்களாக மட்டுமே இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது ஏகே 62 திரைப்படத்திற்கான இயக்குனரை லைக்கா நிறுவனம் ஒரு வழியாக முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் பலரும் எதிர்பார்த்தபடியே மகிழ்திருமேனி தான் அஜித்தை இயக்க இருக்கிறார். இதற்கான தடபுடலான ஏற்பாடுகள் அனைத்தும் இப்போது படு ஜோராக நடந்து வருகிறது.

மேலும் மகிழ் திருமேனி தற்போது லைக்கா நிறுவனர் சுபாஷ்கரனை சந்திக்க லண்டனுக்கு பறந்துள்ளார். அங்கு படம் தொடர்பான அனைத்து விஷயங்களும் விறுவிறுப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறதாம். அது மட்டுமல்லாமல் மகிழ் திருமேனி கூறிய கதையில் லைக்கா நிறுவனம் முழுமையாக திருப்தி அடைந்திருக்கிறது.

அந்த வகையில் இன்னும் ஓரிரு தினங்களில் இந்த கூட்டணியின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து படத்தின் பூஜையும் போடப்பட்டு படப்பிடிப்பு வேகமாக நடைபெற இருக்கிறதாம். இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் தான். மேலும் எந்த விஷயத்தையும் முடிவு செய்யாமல் மகிழ்திருமேனியை சுபாஷ்கரன் லண்டனுக்கு அழைக்கவில்லை.

இதனால் அஜித்தின் ரசிகர்கள் தற்போது மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் விஜய்யின் லியோ திரைப்படம் தற்போது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அந்த படத்திலிருந்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் சோசியல் மீடியாவை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இனி அஜித்தின் ஆட்டமும் ஏகே 62 மூலம் படுஜோராக ஆரம்பிக்க இருப்பது சரியான போட்டியாக இருக்கிறது.

இந்த சலசலப்பு உண்மையாக மாறினால், ரசிகர்கள் அஜித்தின் மாஸ் வீடியோவுக்கு விருந்தளிப்பார்கள், மேலும் ‘ஏகே 62’ படத்தின் தலைப்பும் ஆரம்பத்தில் வெளியிடப்படும். அஜித், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர் ஏற்கனவே லண்டனில் இருப்பதால் இதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும், விரைவில் வீடியோ வெளியாகும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காத்திருந்து பார்க்கலாம்.

சமீபத்திய கதைகள்