32 C
Chennai
Saturday, March 25, 2023

அஜித் 62 படத்திற்காக யாரும் எதிர்பாராத முடிவை எடுத்த​ அஜித் !! இது மட்டும் நடந்தால் !! அதிரும் திரையுலகம்

Date:

தொடர்புடைய கதைகள்

அரசியல் பிரவேசம் எடுக்கும் வாணி போஜன் !

செங்கலம் ஒரு அரசியல் வலைத் தொடராகும், இதில் வாணி போஜன் மற்றும்...

யார் இந்த பெசன்ட் ரவி ? இறுதி வரை...

சூப்பர் ஸ்டார் அஜித் குமாரின் தந்தை பி சுப்பிரமணியம் சென்னையில் வெள்ளிக்கிழமை...

துல்கர் சல்மான் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

துல்கர் சல்மான் தனது 28 வயதில் திரைப்படத்தில் அறிமுகமானார், பல நட்சத்திர...

‘விடுதலை’ ரிலீஸுக்கு முன்னதாக வெற்றி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

வெற்றி மாறன் தனது அடுத்த வெளியீடான 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில்...

தனது அப்பாவை இழந்து தவிக்கும் நிலையில் அஜித்திற்கு லைகா...

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் குமாரின் புதிய படமான ‘ஏகே 62’ படம் சூழ்ந்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்குனராகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் இணைந்து இந்த திட்டம் பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சில வாரங்களுக்கு முன் தெரியாத காரணங்களால் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ‘தடம்’ புகழ் மகிழ் திருமேனிஇயக்கினார்

லியோவிற்கு பயத்தை காட்ட வரும் ஏகே 62 போஸ்டர் விரைவில் வெளிவர இருக்கிறது. விஜய் நடித்த ‘லியோ’விற்கு போட்டியாக, அஜித் படத்தின் போஸ்டர் மிரட்டலாக வருகிறத

விஜய்யின் ‘தளபதி 67’ படத்தின் டைட்டிலை, ‘ப்ரோமோ’வுடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு சமீபத்தில் அறிவித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் ‘லியோ’ படத்தை வரும் அக்டோபர் 19ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில், ‘லியோ’க்கு போட்டியாக தாறுமாறாக அஜித் களமிறங்க போகிறார். இதற்காக ‘ஏகே 62’ படத்தின் ‘ப்ரோமோ’வை இன்னும் ஒரு சில தினத்தில் வெளியிடப் போகின்றனர். மேலும், ‘ஏகே 62’ இயக்குனர் மகிழ் திருமேனி, இசை சந்தோஷ் நாராயணன் என பேசப்படுகிறது.

ஆனால், இன்னும் உறுதிப்படுத்தவில்லை. வியாழக்கிழமையான நேற்று, இதன் ‘அப்டேட்’ வரும் என்று கூறப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. அதனால் இன்று (சனிக்கிழமை) அல்லது நாளைவெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதற்காக இந்த காலதாமதம் என்றால், விஜய்யின் ‘லியோ’ மாதிரியே, டைட்டிலுடன் மோஷன் போஸ்டரை மிக பிரமாண்டமாக வெளியிட அஜித் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனால்தான், இந்த காலதாமதம் எனக் கூறப்படுகிறது. கூடிய விரைவில் ரசிகர்களுக்கு ஏற்றவாறு, இந்த மோஷன் போஸ்டர் அமையும்.சனிக்கிழமை ஆன இன்று இதைப்பற்றி என்னென்ன அப்டேட்டுகள் வரப்போகிறது என்று தெரிய வரும்.

இதனால் ‘தல’ ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்புடன் ‘ஏகே 62’ படத்தின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். அஜித் இந்த படத்தை லியோவை மிஞ்சும் அளவுக்கு பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்.அதுமட்டும் இல்லாமல் கே ஜி ஏப் படத்தை போன்று கதைக்களம் இருக்குமாம் இதனால் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துகொண்டு உள்ளனர் . ஆகையால், ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படத்திற்கு பிறகு அஜித், விஜய் இருவரின் போட்டி இன்னும் குறையவில்லை.

இப்போதுதான், இன்னும் வேகம் எடுக்கிறது. அதிலும் லோகேஷ் ககனகராஜின் ‘லியோ’ வெறித்தனமாக தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அஜித்தும் விரைவில் ‘ஏகே 62’ படத்தின் முழு விவரம் அடங்கிய போஸ்டரை வெளியிடப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருக்கின்றனர்.

அஜித் படங்களை பொருத்தவரை, படத்தில் பிரமாண்டத்தை காட்டிலும், கதைக்கான முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, கதைக்கேற்ற ‘ஹீரோயிசம்’ மட்டுமே, அஜித் கதாபாத்திரத்தில் காணப்படும். விஜய் படங்களை போல, ஓவர் பில்டப்புகள் அஜித் படங்களில் இருக்காது என்பது, அனைவரும் அறிந்த உண்மைதான். அதுபோல், படத்தில் தேவையான அளவில் மட்டுமே பிரமாண்டமும் இருக்கும் என்பதால், அஜித் படங்களுக்கு என தனி வரவேற்பு கிடைக்கிறது.

‘ஏகே 62’ படத்தின் தலைப்பும் ஆரம்பத்தில் வெளியிடப்படும். அஜித், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர் ஏற்கனவே லண்டனில் இருப்பதால் இதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும், விரைவில் வீடியோ வெளியாகும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காத்திருந்து பார்க்கலாம்.

சமீபத்திய கதைகள்