32 C
Chennai
Saturday, March 25, 2023

மீண்டும் நான் அஜித்தின் ரசிகன் தான் என நிரூபித்து காட்டிய சிம்பு !! லேட்டஸ்ட் அப்டேட் இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

அஜித்துக்கு போன் செய்தாரா ரஜினி ! வைரலாகும் தகவல்

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

‘ரோஜா’ சீரியல் நடிகைக்கு மலேசிய முருகன் கோவிலில் ரகசிய...

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'ரோஜா' சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை...

ஏகே 62 படத்தை பற்றி லைகாவிடம் அஜித் கூறிய...

நடிகர் அஜீத் குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24-ம் தேதி...

அரசியல் பிரவேசம் எடுக்கும் வாணி போஜன் !

செங்கலம் ஒரு அரசியல் வலைத் தொடராகும், இதில் வாணி போஜன் மற்றும்...

நடிகர் சிம்பு வெற்றி பெற்ற ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு இப்போது அவரது அடுத்த ‘பாத்து தலை’ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், இது மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது படத்தின் மீதான பார்வையாளர்களின் ஆர்வத்தை எதிர்பார்க்கிறது.

மேலும் பல நடிகர்கள் அஜித்தின் தீவிர ரசிகர்கள் என்று கூட சொல்லி மகிழ்வர். அப்படி பிரபல மூன்றெழுத்து நடிகர் பல காலமாக அஜித் ரசிகராக இருந்த நிலையில், தற்போது விஜய் ரசிகராக மாறியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அண்மையில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவான வாரிசு படத்தில் விஜய் நடித்திருந்தார்.

படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடல் இப்படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பியது. இந்த பாடல் காட்சியில் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், பாடலாசிரியர் விவேக், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தார். மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் சிம்பு இப்பாடல் காட்சியில் தோன்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தினார்.

நடிகர் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகரகாவார், இந்நிலையில் அவர் எப்படி விஜய் பட பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடித்துக்கொடுத்தார் என்ற கேள்வி எழுந்தது. மேலும் விஜய் ரசிகராக முழுவதுமாக சிம்பு மாறிவிட்டார் என்ற செய்தியும் வைரலாக பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகர் சிம்பு இதுகுறித்து பேசியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு,ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த படம் தான் வாலு. இப்படம் வெளியாகி பெரும் தோல்வியுற்ற நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சிம்புவிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளார். இந்நிலையில் அஜித்திடம் சென்று சிம்பு உதவிக்கேட்டுள்ளார். அந்த சமயத்தில் தயாரிப்பாளர் எஸ்.எஸ் சக்கரவர்த்தியிடம் தனக்கு பேச்சுவார்த்தை இல்லை என்றும் இதற்காக வந்து பேசினால் சரியாக இருக்காது என்று கூறி சிம்புவுக்கு உதவ மறுத்துள்ளார் அஜித்.

ஆனால் இந்த விஷசயத்தை கேள்விப்பட்ட நடிகர் விஜய் எஸ்.எஸ். சக்கரவர்த்தியிடம் தானாக முன்வந்து பணத்தை வழங்கி சிம்புவை அந்த இன்னல்களிலிருந்து மீட்டுக்கொடுத்தார். இதற்கு நன்றி கடனாக தான் சிம்பு வாரிசு படத்தின் தீ தளபதி பாடலில் சம்பளமே வாங்காமல் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் நான் எப்போதும் அஜித்தின் ரசிகன் தான். விஜய் அண்ணாவை தனக்கு பிடிக்கும் என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. தகவலின்படி, படத்தின் முதல் சிங்கிள் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், முதல் பாடலை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார், மேலும் நடிகர் சிம்புவின் பிறந்தநாளைக் கொண்டாட தயாரிப்பாளர்கள் அதை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் கேங்ஸ்டர் நாடகம் ‘பாத்து தலை’. இத்திரைப்படம் கன்னடப் படமான ‘முப்தி’யின் ரீமேக் ஆகும், மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன் மற்றும் டீஜய் அருணாசலம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இப்படத்தில் சிம்பு பாதாள உலக கும்பல் வேடத்தில் நடிப்பதாகவும், கவுதம் கார்த்திக் போலீஸ் வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் டிஜிட்டல் உரிமைகள் ஏற்கனவே இந்திய OTT இயங்குதளத்திற்கு விற்கப்பட்டுள்ளன, மேலும் படம் திரையரங்குகளில் வெளியான பிறகு அதன் டிஜிட்டல் பிரீமியரை வெளியிடும்.

சமீபத்திய கதைகள்