Friday, April 26, 2024 9:25 am

ஒரு வழியாக முடிவுக்கு வந்த ஏகே 62 படத்தின் பஞ்சாயத்து !! விக்கி போட்ட ட்வீட் வைரல் !! 😎🔥

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமாரின் 62வது படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் ஆதரவுடன் விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஏகே 62 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சமீபத்தில் இந்த திட்டம் கைவிடப்பட்டதாக ஊகங்கள் பரவி வருகின்றன, அதற்கு பதிலாக, நடிகர் உதயநிதி நடித்த கலக தலைவன் படத்தை கடைசியாக இயக்கிய திரைப்பட தயாரிப்பாளர் மகிழ் திருமேனியுடன் இணைந்து பணியாற்றுவார்.

லைக்கா தயாரிப்பில், அஜித் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் செய்த சில குளறுபடியால் பிப்ரவரி முதல் வாரம் தள்ளிவைக்க பட்டது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பே விக்னேஷ் சிவன் புதிய படத்தில் கமிட் செய்யப்பட்டு, படத்தின் முழு கதையையும் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டார்.

இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதால், இனி இந்த படத்தில் இருந்து தன்னை தூக்க மாட்டார்கள் என்கிற தேனாவெட்டில், மனைவி நயன்தாரா உடன் ஊர் சுற்றி வந்தார் விக்னேஷ் சிவன், மேலும் நடிகர் அஜித் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என சீரியசாக கதையை தயார் செய்வதை விட்டுவிட்டு, மனைவியுடன் செல்ஃபீ எடுத்து அதை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்தார் விக்னேஷ் சிவன்.

படத்தின் படப்பிடிப்பு தொடக்குவதற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், விக்னேஷ் சிவனை நேரில் அழைத்த அஜித், படத்தின் முழு கதையை கேட்டுள்ளார். விக்னேஷ் சிவன் கதையை சொன்னதும் டென்ஷனான அஜித், எட்டு மாதமாக இந்த குப்பை கதையை தான் தயார் செய்து கொண்டிருந்திர்களா.? என முகத்தில் தூக்கி எறிந்தது போன்று பேசிய அஜித், எனக்கு இந்த குப்பை கதையில் நடிக்க உடன்பாடில்லை என நேரடியாகவே அஜித் தெரிவித்துள்ளார்.

ஆனால் அஜித் என்ன சொல்வது, நாம் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசுவோம் என, அஜித் வேண்டாம் என சொன்ன குப்பை கதையை தூக்கி கொண்டு லண்டன் சென்ற விக்னேஷ் சிவன், அங்கே லைக்கா நிறுவனத்தை அனுகி முழு கதையையும் தெரிவித்துள்ளார், கதையை கேட்ட லைக்கா தரப்பு, சுமார் 200 கோடி பட்ஜெட்க்கு ஏற்ற கதையா இது.? எட்டு மாதமாக வீண் செலவு செய்தது இந்த குப்பை கதைக்கு தானா.? என செம்ம டோஸ் விட்ட லைக்கா தரப்பு.

உடனே லண்டனில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்துள்ளார்கள், அந்த மீட்டிங்குக்கு அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வரவழைக்கப்பட்டுள்ளார்கள். லைக்கா தரப்பு, அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் மூவர் மத்தியில் நடந்த இந்த மீட்டிங்கில், கதை எனக்கு பிடிக்கவில்லை என அஜித் தெரிவிக்க, இந்த குப்பை கதையை வைத்து படம் எடுத்தால் பணம் வேஸ்ட், நேரம் வேஸ்ட் என திரும்ப திரும்ப குப்பை கதை என்கிற வார்த்தையை குறிப்பிட்டு வந்துள்ளார்கள் லைக்க்க நிறுவனம்.

ஒரு கட்டத்தில் லைக்கா மற்றும் அஜித் இருவரும் இந்த கதை வேண்டாம் என புறக்கணிக்க,வேறு ஒரு கதையை தயார் செய்து வருகிறேன் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார், அதற்கு அஜித் மற்றும் லைக்கா நிறுவனம் என இரண்டு தரப்பும் ஒப்பு கொள்ளவில்லை. உங்களுக்கு கொடுத்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்த தவறி வீட்டீர்கள், இதற்கு மேல் உங்களுக்கு வாய்ப்பு கிடையாது என லைக்கா நிறுவனம் விக்னேஷ் சிவன் முகத்தில் அடித்தது போல் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் எவ்வளவோ முயற்சி செய்தும் அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பு சமாதனம் ஆகாததால், அஜித் நடிக்கும் புதிய படத்தில் தனக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது, என்கிற உச்சக்கட்ட அவமானத்துடன் மீட்டிங் முடித்துவிட்டு வெளியில் வந்துள்ளார் விக்னேஷ் சிவன். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்தின் வேறு ஒரு இயக்குனர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்னேஷ் சிவன் நெட்பிளிக்ஸின் பதிவிற்கு தற்போது லைக் போட்டுள்ளதால் ஏகே 62 படத்தில் இருந்து விலகவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. மேலும் அஜித் தனக்கு தோல்வி படம் கொடுத்தாலும் அந்த ஹீரோவுடன் ஹிட் படம் கொடுத்து விட்டு தான் வேறு ஒரு இயக்குனர் படத்தில் நடிப்பார். இப்படி இருக்கையில் விக்னேஷ் சிவனை எப்படி கைவிடுவார்.

எனவே விக்னேஷ் சிவன் மற்றும் அஜித் கூட்டணியில் ஏகே 62 படம் உருவாவது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இந்த வாரத்திற்குள் லைக்கா இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது. ஆகையால் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
இதோ உங்கள் பார்வைக்கு .

இருப்பினும், புதிய சங்கம் பற்றியோ அல்லது விக்னேஷ் இயக்குவதில் தாமதம் குறித்தோ இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. மறுபுறம், விக்னேஷ் மற்றும் அஜித் இருவரும் சமீபத்தில் லண்டனுக்கு பறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், எச் வினோத் இயக்கிய அஜித்தின் சமீபத்திய வெளியீடான துணிவு, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றது மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்