Saturday, April 1, 2023

உயிருக்கு போராடும் நடிகர் விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலை என்ன? உண்மையை கூறிய பிரபலம்

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

படப்பிடில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி நடிகர் விஜய் ஆண்டனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விரைவில் காணொளி மூலம் அனைவரிடமும் பேசுவார் என்று இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்துவரும் நிலையில், மலேசியாவில் லங்காவி தீவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியபோது ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனி மற்றும் படத்தில் நடித்த நடிகைக்கு காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்பு நேற்றைய தினம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட விஜய் ஆண்டனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இவர் கண்விழிக்காமல், சுயநினைவை இழந்துவிட்டதாக பல தகவல்கள் வெளியே பரவி வருகின்றது. இந்நிலையில் இந்த பேச்சுக்கு இயக்குனர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இயக்குனர் கூறியது என்ன?
இயக்குனர் சுசீந்திரன் அறிக்கையில், “பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி 2 நாட்களுக்கு முன்னாடியே சென்னையில் அவரு வீட்டுக்கு வந்துட்டாரு.

2 வாரம் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க சொல்லிருக்காங்க, கூடிய சீக்கிரம் ரசிகர்கிட்ட வீடியோ மூலமா பேசுவாரு, ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம்,

விஜய் ஆண்டனி பற்றின தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்னு கேட்டுகிறேன்…” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய கதைகள்