பிரபல விஜய் தொலைக்காட்சி சேனலில் 6 ஆண்டுகளாக உலக நாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த ஆண்டும் கமல் ஹாசன் அவர்களால் 2022 அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்றுள்ளது.
103 நாட்கள் கடந்த பிக்பாஸ் சீசன் 8ல் கடந்த சில நாட்களுக்கு முன் கதிரவன் 3 லட்சம் பணப்பையை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதுடன் 23லட்சம் சம்பளமாக பெற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து பிக்பாஸ் 13 லட்சம் மதிப்பில் பணப்பெட்டியை வைத்திருந்தார்.
கடைசி நேரத்தில் அப்பெட்டியை முதல் இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்ட அமுதவாணன் எடுத்துச்சென்றுள்ளார். இந்நிலையில் போட்டியாளர்களே லட்சத்தில் சம்பளம் பெறும் போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமல் ஹாசனுக்கு எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி எழுந்திருந்தது.