Saturday, April 1, 2023

அடி தூள் AK62 படத்தில் அஜித்தின் ஹேர் ஸ்டைல் மட்டுமல்ல ! இதுவும் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் – கசிந்த தகவல்

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

இயக்குனர் விக்னேஷ் சிவன் விரைவில் அஜீத் குமாரின் ‘AK62’ படத்தை இயக்கவுள்ளார், இது விரைவில் திரைக்கு வரவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘துணிவு’ படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள நிலையில், விக்னேஷ் சிவனுடன் அஜித் நடிக்கும் படம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் மும்பையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணிவு படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அஜித் நடிக்கப் போகும் ஏகே 62 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. சபரி மலைக்கு சென்ற போது கூட அஜித் படம் குறித்த கேள்விகள் தான் விக்னேஷ் சிவனிடம் எழுப்பப்பட்டது. ஆனால், சாமி சரணம் என சொல்லி விட்டு அப்டேட் கொடுக்காமல் எஸ்கேப் ஆகி விட்டார்.

தளபதி 67 படத்தில் இணைந்துள்ள நடிகை த்ரிஷா ஏகே 62 படத்திலும் அஜித்துடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தில் த்ரிஷா நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன.

ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் பெயரும் அடிபட்டு வந்த நிலையில், அவர்கள் இருவரும் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை அஜித் படத்தில் நடிக்காத நிலையில், இந்த படத்தின் வாய்ப்பையும் தவற விட்டுள்ளார் என்கின்றனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள அஜித்தின் ஏகே 62 படத்தில் தமிழ்நாட்டு நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்கவும் பேச்சுக்கள் அடிபட்டு வருவதாக தற்போது லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்தால் சூப்பராத்தான் இருக்கும் என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் வரும் பிப்ரவரி மாதம் துவங்குகிறது. இதில், முன்னர் நடித்த படங்களைப் போல சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல் தலைக்கு கலரிங் செய்து நடிக்கவுள்ளார் தல.


இதனால் படத்திற்கான ஹைப் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே இருக்கிறது. அப்படியாக, தலைக்கு வித்யாசமாக கலரிங் செய்திருந்த புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக சென்றது.

இந்த படத்தில் அஜித்திற்கு அந்த கெட்ட மாற்றம் மட்டுமில்லாது, தன் பேச்சு ஸ்டைலையே மாற்றப்போகிறார் போகிறார் தல. வடசென்னையை மையமாக வைத்து கதை உருவாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இதன் காரணமாக தல அஜித் அழகாக சென்னை தமிழில் பேசவுள்ளதாக படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

அப்படி பார்த்தால் கண்டிப்பாக இந்த படத்தில் அஜித்தின் மேனரிசம் வித்யாசமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. த்ரிஷா அணியில் இணைவார் என்ற யூகங்கள் நிலவி வரும் நிலையில், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தில் நடிகர் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கிறார் என்று முன்பே தெரிவித்திருந்தோம். பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக இருந்து வரும் நடிகர் சந்தானமும் இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.


அஜித்திற்கு முன்பு ‘ஆளுமா டோலுமா’, ‘சர்வைவா’ என நடிகருக்கு அடிதடி பாடல்களை கிளப்பிய இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல OTT தளம் வாங்கியுள்ளது.

சமீபத்திய கதைகள்