28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

துணிவு படத்தால் முக்கிய விசாரணையில் சிக்கிய பிரபல தனியார் வங்கி !! இது ரீல் இல்ல ரியல் வெற்றி

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படம் ஜனவரி 11, 2023 அன்று இந்திய திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.

அதன் மெகா திறப்பு முதல், துனிவு இந்தியாவிலும் உலக அளவிலும் வெற்றிகரமான ரோலில் உள்ளது. எச் வினோத் இயக்கிய இந்த முயற்சி சமீபத்தில் INR 100 கோடி கிளப்பில் நுழைந்தது. இப்போது இந்திய மற்றும் உலகளாவிய வசூல் மூலம் 200 கோடி ரூபாய் இலக்கை எட்டுகிறது.

அதில் விஜய் கைதான் பெரிதும் ஓங்கி இருந்தது இருப்பினும் அஜித் விடுவதாக இல்லை தொடர்ந்து விஜய் உடன் மோதிக்கொண்டே இருக்கிறார் அந்த வகையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு திரைப்படங்கள் களம் இறங்கின.

இதனால் இந்த பொங்கல் ரசிகர்களுக்கு திருவிழாவில் அமைந்தது. அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் சமூக அக்கறை கலந்த ஒரு படமாக உருவாகியதால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஆரம்பத்தில் இருந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மறுபக்கம் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வழக்கம் போல குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது. அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம்..

முதல் வார முடிவில் 92 கோடி வசூல் செய்துள்ளது. தளபதி விஜயின் வாரிசு படம் 90 கோடி மொத்தமாக வசூல் செய்திருக்கிறாராம் இதன் மூலம் முதல் வாரத்தில் அஜித்தின் துணிவு கை ஓங்கி இருக்கிறது. இது தற்பொழுது விஜய்க்கு மிகப்பெரிய ஒரு சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாம். பொறுத்து பார்க்கலாம் அடுத்தடுத்த வாரங்களில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கும்..இந்நிலையில் ‘துணிவு’ படத்தில் வங்கிகள், மியூச்சுவல் பண்ட்கள் தில்லு முல்லுவில் ஈடுபட்டால் என்ன நடக்கும் என காட்டியிருப்பார்கள். ஆனால் அதில் பல தவறான தகவல்களும் நிரம்பியுள்ளன. இந்நிலையில், அப்படம் வந்த நேரமா என்று தெரியவில்லை, 2016 மற்றும் 2019-க்கு இடைப்பட்ட காலத்தில் யெஸ் வங்கி – நிப்பான் மியூச்சுவல் பண்ட் (அன்று ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட்) இடையே நடைபெற்ற முதலீடுகளில், முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து செபி விசாரணையை துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நிப்பான் இந்தியா மியூச்சுவல் பண்ட் என்றழைக்கப்படும் நிறுவனம், 2019-க்கு முன்பு அனில் அம்பானியின் கட்டுப்பாட்டில் ரிலையன்ஸ் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனியாக இருந்தாது. இந்நிறுவனம் பிரச்னையில் சிக்கிய போது அக்டோபர் 2019ல், நிப்பான் ஆயுள் காப்பீடு நிறுவனம் எனும் வெளிநாட்டு நிறுவனத்தின் அங்கமான நிப்பான் இந்தியா, ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டின் 75% பங்குகளை வாங்கி கையகப்படுத்தியது. இன்று நிப்பான் இந்தியா மியூச்சுவல் பண்ட் நாட்டின் நான்காவது பெரிய மியூச்சுவல் பண்ட் நிறுவனமாக உள்ளது. சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் தொகையை இந்நிறுவனம் நிர்வகிக்கிறது. நிப்பான் கையகப்படுத்துவதற்கு முன்பு ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் ஒரு பிரச்னையில் சிக்கியது.

தனியார் வங்கியான யெஸ் வங்கி, 2016 – 19 காலக்கட்டத்தில் மோசமான நிர்வாகம் மற்றும் வாராக் கடன் அளவு கடுமையாக உயர்ந்து திவால் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் யெஸ் வங்கி டியர் 1 கடன் பத்திரங்களை ரூ.84,100 கோடிக்கு வெளியிட்டது. அன்று ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் ஆனது பொது மக்கள் பணம் ரூ.25,000 கோடியை எடுத்து மிக அதிக அளவில் அக்கடன் பத்திரங்களில் முதலீடு செய்தது. இதற்கு பின்னணியில் வங்கிக்கும், அனில் அம்பானிக்கும் இடையே திரை மறைவு ஒப்பந்தம் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது யெஸ் வங்கிக்கு மியூச்சுவல் பண்ட் மூலம் பணம் தந்ததற்கு கைமாறாக, அனில் அம்பானி நிறுவனங்களில் யெஸ் வங்கி முதலீடு செய்யும். அதாவது மக்கள் பணத்தை எடுத்து தங்களின் மூழ்கும் நிறுவனத்தை நடத்துவது.

இவ்வாறு அன்றைக்கு ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் ரூ.25 ஆயிரம் கோடிக்கு வாங்கிக் குவித்த பண்ட்களை, 2020ல், நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதி என யெஸ் வங்கி ரத்து செய்தது. பாண்ட் வைத்திருப்பவர்கள் நீதிமன்ற படி ஏறி வருகின்றனர். திவால் நிலைக்கு வந்த யெஸ் வங்கியை 2020ல் ரிசர்வ் வங்கி கைப்பற்றி, வங்கிகள் கூட்டமைப்புக்கு விற்றது. இந்நிலையில் பாண்ட்களில் முதலீடு செய்ய திரைமறைவு டீலிங் செய்யப்பட்டது உண்மை தானா என்பது குறித்து செபி விசாரித்து வருகிறது. விசாரணை ரகசியப்பூர்வமானது என்பதால் இவ்விவகாரத்தை அறிந்தவர்கள் தங்கள் பெயரை வெளியிடாமல் தகவலை மட்டும் பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

செபியின் விசாரணையில் மியூச்சுவல் பண்ட், அதன் அதிகாரிகள் அல்லது வங்கிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவர்கள் மூலதனச் சந்தைகளை அணுகுவதற்கான கட்டுப்பாடுகள் முதல் பண அபராதம் வரை விதிக்கப்படலாம். மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான நிப்பான் இந்தியாவையும் குற்றத்திற்கு பொறுப்பேற்கச் செய்யலாம்.

‘துணிவு ’ ஒரு பயங்கரமான கும்பலைக் கொண்ட ஒரு புதிரான பணக் கொள்ளையைக் காட்டுகிறது. சதி ஒரு வங்கி கொள்ளையை சுற்றி வருகிறது. இப்படத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், பவானி ரெட்டி, சமுத்திரக்கனி, மமதி சாரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை எச் வினோத் இயக்குகிறார் மற்றும் போனி கபூர் தயாரித்துள்ளார். திரைப்படம் அதன் சுவாரஸ்யமான கதைக்களம் மற்றும் நட்சத்திர நடிகர்களின் ஈர்க்கக்கூடிய நடிப்பிற்காக உலகம் முழுவதும் இதயங்களை வென்றது.

சமீபத்திய கதைகள்