Wednesday, May 1, 2024 12:50 am

மங்காத்தாக்கும் ஒரு படி மேல அஜித்தின் துணிவு படத்தின் முழு விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் கதாநாயகனாகவும், மஞ்சு வாரியர் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். அஜீத்-எச்.வினோத் காம்போவை, அவர்களின் சமீபத்திய வலிமை படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூருடன் இந்தப் படம் மீண்டும் இணைகிறது. கபூர் தனது பேவியூ ப்ராஜெக்ட்ஸ் பேனரின் கீழ் படத்தைத் தயாரிக்கும் அதே வேளையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை விநியோகிக்கவுள்ளது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை ஸ்ரீ சாய் கிரண் எழுதி யாசின் நிசார் பாடியுள்ளார். லிரிகல் வீடியோவில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இந்த பெப்பி நம்பரைப் பற்றி பேசுகிறார்கள். எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வீரா, சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், மகாநதி ஷங்கர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னையில் ஒரு தனியார் வங்கியை ஆரம்பத்திலேயே ஒரு கும்பல் போலிஸ் உதவியுடன் கொள்ளையடிக்க வருகிறது. வந்த இடத்தில் அவர்களுக்கே தெரியாமல் அந்த பேங்கை அஜித் கொள்ளையடிக்க மஞ்சு வாரியருடன் ஒரு ப்ளான் போடுகிறார்.

அஜித்துடன் போலிஸ் பேச்சு வார்த்தை நடத்த, ஒரு கட்டத்தில் அந்த வங்கியில் மிகப்பெரிய எக்ப்ளோசிவ் பாம் கிடைக்கிறது. அப்போது தான் தெரிகிறது, உள்ளே மூன்றாவதாக ஒரு டீம் இருக்கிறது என, பிறகு இந்த அயோக்கியர்களுக்குள் நடக்கும் ஆட்டம் தான் மீதிக்கதை.

அஜித் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் என்றாலே செம குஷியாக ஆகிவிடுகிறார், தனது மேனரிசம், டயலாக் டெலிவெரி என பட்டாசு கிளப்புகிறார். அதிலும் பேங்க் உள்ளே சென்று அவர் செய்யும் சேட்டைகள் கலகலப்புக்கு பஞ்சமில்லை.

படத்தில் ஒரு பேங்கில் நடக்கும் மோசடியை வெளியே கொண்டு வர நடக்கும் கதை தான், இதற்காக வினோத் எளிய மக்களுக்கும் புரியும் படி பேங்க்-ல் நடக்கும் விஷயங்களை குறிப்பாக பணத்தை முதலீடு செய்வதில் நடக்கும் குளறுபடிகளை தோல் உரித்து காட்டியுள்ளார்.

படத்தின் சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஏதோ ஒரு வகையில் வசனங்கள் மூலம் ஈர்க்கின்றனர். அதிலும் மைபா என்ற பத்திரிகையாளர் கதாபாத்திரம் கலக்கல். படத்தின் மிகப்பெரிய பலம் சண்டைக்காட்சிகள். அஜித் அதகளம் செய்கிறார், சுப்ரீம் சுந்தர் அதற்கு பக்க பலமாக உள்ளார்

மஞ்சு வாரியருக்கு படம் முழுக்க வரும் அளவிற்கு கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாகவும் பொருந்தி உள்ளார். போலீஸ் கமிஷனராக சமுத்திரக்கனி மிடுக்கான தோற்றத்தில் மிரட்டுகிறார். முதல் பாதி முழுக்கவே படு பயங்கரமாக வேகமாகவும் செல்கிறது. படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இடைவெளி வந்தது போல் ஒரு உணர்வை தருகிறது. இரண்டாம் பாதியில் தான் வங்கியை கொள்ளை அடிப்பதற்கான காரணத்தை சொல்கின்றனர். அதுவும் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது படத்திற்கு கிடைத்த வெற்றி.

பொதுவாக கமர்சியல் படங்களில் ஆழமான கருத்துக்களை வைப்பதில் வல்லவர் வினோத். அந்த வகையில் துணிவு படத்திலும் வங்கி மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதை துணிச்சலாக சொல்லி இருக்கிறார். ஜிப்ரானின் இசையில் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. குறிப்பாக படத்தை நகர்த்திச் செல்ல அது பெரிதும் உதவுகிறது. துணிவு படத்தில் அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட் ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைக்கிறது. நிச்சயம் துணிவு படம் அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.

* மங்காத்தாக்கும் மேல இருக்குடா படம் 😘🔥

* வினோத் சம்பவம் & Screenplay 🔥

* அஜீத் த பத்தி சொல்லனும்னா த்தா God of Mass டா கோத்தா 🔥🔥

* சுத்தமா லேக் ஆகல.. போர் அடிக்கல.. சும்மா விர்ருன்னு போது.

* கேங்ஸ்ட்டா சாங் மேக்கிங் மொரட்டு ஸ்டைல் அஜீத் மாஸ் மாஸ்


மங்காத்தாவை விட இதில் அஜித் செமயா கெத்தா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது மொத்தத்தில் லாஜிக் இல்லை என்றாலும் அஜித்தின் மேஜிக் படத்தை தூக்கி நிறுத்துகிறது.இதற்கிடையில், துனிவு 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வரவுள்ளது. எச் வினோத் இயக்கிய இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு வினோத் மற்றும் அஜித்தின் மூன்றாவது கூட்டணியை துனிவு குறிக்கிறது. வங்கிக் கொள்ளைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி நாடகமாக, துனிவு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதுவரை, சில்லா சில்லா, காசேதன் கடவுலடா, மற்றும் கேங்க்ஸ்டா ஆகிய மூன்று பாடல்கள் கொண்ட டிராக்குகள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்