30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாவிஜய் நடித்த இந்த ஹிட் படத்தில் நான் நடிக்க வேண்டியது நடித்திருந்தால் வேற லெவலுக்கு...

விஜய் நடித்த இந்த ஹிட் படத்தில் நான் நடிக்க வேண்டியது நடித்திருந்தால் வேற லெவலுக்கு இருந்திருப்பேன் வருத்தப்படும் பிரபல நடிகர்

Date:

தொடர்புடைய கதைகள்

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

தளபதி விஜய் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார் அதேபோல் சில வெற்றி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார். அந்த வகையில் விஜய்க்கு சினிமாவில் தூக்கி விட்ட திரைப்படங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுவது 1997 ஆம் ஆண்டு பாசில் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான திரைப்படம் காதலுக்கு மரியாதை.

இந்தத் திரைப்படத்தில் விஜயுடன் ஷாலினி நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் சிவகுமார், ராதாரவி, தலைவாசல் விஜய், தாமு, மணிவண்ணன், சார்லி சரண்யா, மோகன், ஸ்ரீவித்யா, ராதாகிருஷ்ணன், என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் இன்றளவு ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் தற்பொழுதும் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள்.

அப்படி மிகப்பெரிய ஹிட் திரைப்படத்தின் ரகசியம் ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தில் விஜய் நடிப்பதற்கு முன்பு இயக்குனர் பாசில் வேறொரு நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்தார் அது வேறு யாரும் கிடையாது நடிகர் அப்பாஸ் தான் அவரை தான் முதன் முதலில் நடிக்க வைக்க தொடர்பு கொண்டு உள்ளார். அப்பொழுது அப்பாஸின் மேனேஜர் அப்பாஸ்க்கு தெரியாமல் இந்த திரைப்படத்திற்கு நேரம் ஒதுக்காமல் வேறு திரைப்படங்களுக்கு கால் சீட் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு தான் அப்பாஸுக்கு இந்த தகவல் தெரிய வந்துள்ளது. அது தெரிந்தவுடன் அப்பாஸ் மிகவும் வருத்தப்பட்டாராம். ஒரு பேட்டியில் கூட அவர் கூறியுள்ளார் அப்பொழுது இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறி மிகவும் வருத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

சமீபத்திய கதைகள்