Sunday, May 28, 2023 6:46 pm

அஜித் ஸ்டேஜ் ஏறினா தெரியும் யார் சூர Massnu !! தில் ராஜு பப்பு இங்க வேகாது !! வாரிசு -ச தூக்கி சாப்பிட்ரும்”

spot_img

தொடர்புடைய கதைகள்

கேரளா ஸ்டோரி பற்றி மனம் திறந்து பேசிய கமல்

இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன்....

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா ? லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கானின்...

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...
- Advertisement -

அஜித் அடுத்ததாக இயக்குனர் எச் வினோத்தின் ‘துனிவு’ படத்தில் நடிக்கிறார், இது பொங்கலுக்கு ஜனவரி 12, 2022 அன்று திரைக்கு வர உள்ளது. அவர் விரைவில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்த படப்பிடிப்பைத் தொடங்குவார், இது தற்காலிகமாக ‘ஏகே 62’ என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அஜீத் தனது உலகப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கவுள்ளார். அஜித் ஓராண்டுக்கும் மேலாக படங்களில் இருந்து ஓய்வு எடுப்பார் என்றும், 62 நாடுகளுக்கு 18 மாதங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் லலித் குமார் வெளியிடுவதாக அறிவிப்பு வந்தது. அதே போல் அஜித்தின் “துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். ஆதலால் “துணிவு” திரைப்படத்திற்குத்தான் திரையரங்குகள் அதிகமாக ஒதுக்கப்படும் என பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் தற்போது இரு திரைப்படங்களுக்கும் சமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட “வாரிசு” படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ “தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் ஒன். அதனால் சமமாக திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது. உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசுக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கவேண்டும் என கேட்கப்போகிறேன்” என்று கூறியிருந்தார்.

தில் ராஜூவின் இந்த பேச்சு அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இணையத்தில் அஜித், விஜய் ரசிகர்களிடையே யார் நம்பர் ஒன் என்ற விவாதமும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

“தெலுங்கில் சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரி படம் தயாரிக்கிறார். அவர் ஆந்திராவில் பாலகிருஷ்ணாவை விட சிரஞ்சீவிதான் டாப் என்று அங்குச் சென்று கூறமுடியுமா? தெலுங்கில் இருந்து வந்து என்ன வேண்டுமானாலும் பேசலாமா?” என அப்பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “தில் ராஜூ எந்த நோக்கத்தில் இவ்வாறு பேசுகிறார் என தெரியவில்லை. வெளிநாடுகள் என்று எடுத்துக்கொண்டால் விஜய் படங்களுக்கு நல்ல வியாபாரம் உண்டு. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை அஜித்தான் நம்பர் ஒன். அஜித்தை அடிச்சிக்கவே முடியாது” என அப்பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் பைக் ரேஸ் சென்ற ஒரு போட்டோவை வெளியிட்டு no guts, no glory என பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் தில் ராஜுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போட்டு உள்ளீர்கள் என கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்ட அந்த புகைப்படத்தை..

இந்நிலையில் Fatman ரவீந்திரன் அவர்கள் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு !

இதற்கிடையில், ‘துனிவு’ வீரா, அஜய், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வங்கிக் கொள்ளையின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் என்றும், சாம்பல் நிற நிழல்கள் கொண்ட ஒரு பாத்திரத்தில் அஜித் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் தொடர்ந்து மூன்றாவது படம் இதுவாகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்