இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘துணிவு ‘ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படக்குழு சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வந்தாலும், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் நடந்து வருவதாக தெரிவித்திருந்தோம். இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முன்பு தனது போர்ஷன்களுக்கு டப்பிங் பேசிய நிலையில், தற்போது பிக் பாஸ் புகழ் அமீர் தனது போர்ஷன்களுக்கு டப்பிங் பேசி வருகிறார்.
அஜித் நடித்து வரும் துணிவு படத்துக்காக ஒரு ப்ரமோஷன் பாடல் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்போது டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துணிவு திரைப்படம் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகி வருகிறது ரசிகர்கள் அறிந்ததே. அதனால் படத்தின் ப்ரமோஷனுக்காக பக்காவான மாஸ் பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளதாம்.
இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING :
Most AWAITED #Ajithkumar's #THUNIVU Music Track Update Today Evening 🔥
A @GhibranOfficial Music 💥#ThunivuPongal #NoGutsNoGlory
— AJITH FANS COMMUNITY™ (@TFC_mass) November 4, 2022
ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார். இந்நிலையில் துணிவு படத்தின் ப்ரோமோ பாடல் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ப்ரோமோ பாடலுக்கு நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்து படமாக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
துணிவு படத்தின் டப்பிங் பணிகள் கடந்த வாரம் முதல் துவங்கி நடைபெற்று வருகின்றன. நடிகர்கள் பிரேம் குமார், வல்லவன், மஞ்சு வாரியர், பிக்பாஸ் அமீர் ஆகியோர் டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர்.
Actor #AjithKumar has completed his dubbing work for #Thunivu
Post production is going on full swing for #Pongal2023 release..#ThunivuPongal #AK
— Ramesh Bala (@rameshlaus) November 4, 2022
இந்நிலையில் அஜித் டப்பிங் பேசி முடித்துள்ளதாகவும் செய்திகள் வர தொடங்கியது ..
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் தொடர்ந்து மூன்றாவது படம் இதுவாகும்.